தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-9502

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

ரிப்இய்யு பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ரமலானின் (ஆரம்பமாக இருக்குமோ இருக்காதோ என்ற) சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களும், அவர்களுடன் வேறு சிலரும் இருக்கும் போது அவர்களுக்கு முன் பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது.  அனைவரும் அதை சாப்பிடுவதற்கு ஒன்று கூடினர். ஒரு மனிதர் மட்டும் அவர்களை விட்டு விலகினார். அம்மார் (ரலி) அவர்கள், அவரிடம், வந்து சாப்பிடுங்கள்! என்று கூறினார்கள். அவர் நான் நோன்பாளி என்று கூறினார். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், நீ அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருந்தால் வந்து சாப்பிடு! என்று கூறினார்கள்.

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 9502)

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ الْعَمِّيُّ، عَنْ رِبْعِيٍّ، عَنْ مَنْصُورٍ،

أَنَّ عَمَّارَ بْنَ يَاسِرٍ، وَنَاسًا مَعَهُ أَتَوْهُمْ بِمَسْلُوخَةٍ مَشْوِيَّةٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ أَنَّهُ رَمَضَانُ، أَوْ لَيْسَ مِنْ رَمَضَانَ، فَاجْتَمَعُوا وَاعْتَزَلَهُمْ رَجُلٌ، فَقَالَ لَهُ عَمَّارٌ: «تَعَالَ فَكُلْ» قَالَ: فَإِنِّي صَائِمٌ، فَقَالَ لَهُ عَمَّارٌ: «إِنْ كُنْتَ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَتَعَالَ فَكُلْ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-9502.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-9293.




  • இது மவ்கூஃபான செய்தி.
  • இதன் அறிவிப்பாளர்தொடர் ரிப்இய்யி —> மன்ஸூர் என்று வந்துள்ளது. இது மக்தபதுர் ருஷ்தின் பதிப்பு.
  • தாருல் ஃபாரூக் போன்ற மற்ற பதிப்புகளில் மன்ஸூர் —> ரிப்இய்யி என்று வந்துள்ளது .

مصنف ابن أبي شيبة (ط الفاروق) (4/ 111)

9592- حَدَّثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ الْعَمِّيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، أَنَّ عَمَّارَ بْنَ يَاسِرٍ وَنَاسًا مَعَهُ أَتَوْهُمْ بِمَسْلُوخَةٍ مَشْوِيَّةٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ أَنَّهُ مِنْ رَمَضَانُ، أَوْ لَيْسَ مِنْ رَمَضَانَ، فَاجْتَمَعُوا وَاعْتَزَلَهُمْ رَجُلٌ، فَقَالَ لَهُ عَمَّارٌ: تَعَالَ فَكُلْ، قَالَ: فَإِنِّي صَائِمٌ، فَقَالَ لَهُ عَمَّارٌ: إِنْ كُنْت تُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ فَتَعَالَ فَكُلْ. (3/72).

தாருல் ஃபாரூக் பதிப்பே சரியானது. ஏனெனில் ரிப்இய்யு பின் ஹிராஷ் ஆசிரியர் ஆவார். மன்ஸூர் மாணவராவார்.

இந்த செய்தியை ரிப்இய்யு பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள், அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்கவில்லை. இடையில் ஒருவர் விடுப்பட்டுள்ளார்.

(பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7318)

மேலும் பார்க்க: திர்மிதீ-686 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.