தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4330

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஸமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள் நான்கு ஆகும்.

1 . ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன் என துதிக்கேறேன்)
2 . அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)
3 . லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை)
4 . அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகவும் பெரியவன்).

இவற்றில் எதை நீர் முதலில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை” என்று கூறிவிட்டு, “உம்முடைய அடிமைக்கு யஸார் (சுலபம்) என்றோ, ரபாஹ் (இலாபம்) என்றோ, நஜீஹ் (வெற்றியாளன்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம். ஏனெனில், (அந்தப் பெயர் சொல்லி) “அவன் அங்கு இருக்கிறானா” என்று நீர் கேட்கும்போது, அவன் அங்கு இல்லாவிட்டால் “இல்லை” என்று பதில் வரும். (அது திருப்தியளிப்பதற்குப் பகரமாக நற்குறியற்ற பதிலாக உங்கள் மனதுக்குப் படலாம்)” என்று கூறினார்கள்.


அறிவிப்பாளர் ஸமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இவை நான்கு பெயர்கள் மட்டுமே ஆகும். இவற்றைவிடக் கூடுதலாக வேறெதையும் என்னிடமிருந்து நீங்கள் அறிவிக்க வேண்டாம்.


மேற்கண்ட ஹதீஸ் ஸமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அடிமைகளுக்குப் பெயர் சூட்டுவது தொடர்பாகவே இடம்பெற்றுள்ளது. நான்கு (துதிச்) சொற்கள் பற்றிய குறிப்பு இல்லை.


அத்தியாயம்: 38

(முஸ்லிம்: 4330)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ رَبِيعِ بْنِ عُمَيْلَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

أَحَبُّ الْكَلَامِ إِلَى اللهِ أَرْبَعٌ: سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ. لَا يَضُرُّكَ بِأَيِّهِنَّ بَدَأْتَ ”
“وَلَا تُسَمِّيَنَّ غُلَامَكَ يَسَارًا، وَلَا رَبَاحًا، وَلَا نَجِيحًا، وَلَا أَفْلَحَ، فَإِنَّكَ تَقُولُ: أَثَمَّ هُوَ؟ فَلَا يَكُونُ فَيَقُولُ: لَا إِنَّمَا هُنَّ أَرْبَعٌ فَلَا تَزِيدُنَّ عَلَيَّ

– وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنِي جَرِيرٌ، ح وحَدَّثَنِي أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا رَوْحٌ وَهُوَ ابْنُ الْقَاسِمِ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، كُلُّهُمْ، عَنْ مَنْصُورٍ، بِإِسْنَادِ زُهَيْرٍ،

فَأَمَّا حَدِيثُ جَرِيرٍ وَرَوْحٍ فَكَمِثْلِ حَدِيثِ زُهَيْرٍ بِقِصَّتِهِ
وَأَمَّا حَدِيثُ شُعْبَةَ فَلَيْسَ فِيهِ إِلَّا ذِكْرُ تَسْمِيَةِ الْغُلَامِ وَلَمْ يَذْكُرِ الْكَلَامَ الْأَرْبَعَ


Muslim-Tamil-4330.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2137.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-3992.




இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர். இந்தச் செய்தியின் மூன்றாவது பகுதி ஸமுரா (ரலி) அவர்களின் சொல் போன்று இருந்தாலும் அஹ்மத்-20126 இல் ஹதீஸின் முதல் பகுதியாக, நபியின் சொல்லாக வந்துள்ளது. (ஆனால் இரண்டும் வெவ்வேறு கருத்தை தருகின்றன.)…


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


1 . இந்தக் கருத்தில் ஸமுரா பின் ஜுன்தப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • மன்ஸூர் —> ஹிலால் பின் யஸாஃப் —> ரபீஃ பின் உமைலா —> ஸமுரா பின் ஜுன்தப் (ரலி)

பார்க்க: …


  • ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    —> மன்ஸூர் —> ஹிலால் பின் யஸாஃப் —> ஸமுரா பின் ஜுன்தப் (ரலி)

பார்க்க: ஹதீஸு ஸுஃப்யான் ஸவ்ரீ-266,

من حديث سفيان الثوري – ت عامر صبري (ص150):
266- عن مَنْصُور عن هلال بن يساف عن سمرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم أفضل الكلام سبحان الله والحمد لله ولا إله إلا الله واللهُ أَكْبَر ‌لا ‌يضرك ‌بأيهن ‌بدأت.


  • ஸலமா பின் குஹைல் —> ஹிலால் பின் யஸாஃப் —> ஸமுரா பின் ஜுன்தப் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-20126, 20223, இப்னு மாஜா-3811, …


 


 


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்

 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1044, முஸ்லிம்-5277, குப்ரா நஸாயீ- 10609,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.