بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
முஸ்னத் அஹ்மத்.
அத்தியாயம்: 1
சொர்க்கவாசிகள் என நற்செய்திக் கூறப்பட்ட 10 நபித்தோழர்கள்; நேர்வழியில் நடந்த ஆட்சியாளர்கள் ஆகியோர் வழியாக வந்துள்ள செய்திகள்.
பாடம்: 1
அபூபக்ர் அஸ்ஸித்தீக் (அப்துல்லாஹ் பின் உஸ்மான் பின் ஆமிர்-ரலி) அவர்கள் வழியாக வந்துள்ள செய்திகள்:
1 . (கைஸ் பின் அவ்ஃப்) கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு தடவை அபூபக்ர் (ரலி) அவர்கள் (உரை நிகழ்த்த) எழுந்து நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பின்பு, மக்களே! நீங்கள், “நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர்வழி நடக்கும்போது வழிகெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது” என்ற (அல்குர்ஆன்: 5:105) வசனத்தை ஓதுகின்றீர்கள்.
(அதன் விளக்கம் என்னவெனில்) “மக்கள் ஒரு தீமையைக் கண்டும் அதைத் தடுக்காமல் இருந்தால் (நல்லோர், தீயோர்) என அனைவருக்கும் அல்லாஹ் தண்டனையை தந்துவிடுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நாங்கள் செவியேற்றுள்ளோம் என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 1)مُسْنَدُ الْعَشْرَةِ الْمُبَشَّرِينَ بِالْجَنَّةِ
مُسْنَدُ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ
مُسْنَدُ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَخْبَرَنَا الشَّيْخُ أَبُو الْقَاسِمِ هِبَةُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْوَاحِدِ بْنِ أَحْمَدَ بْنِ الْحَصِينِ الشيَّبْاَنِيُّ قِرَاءَةً عَلَيْهِ – وَأَنَا أَسْمَعُ – فَأَقَرَّ بِهِ قَالَ: حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ مُحَمَّدٍ التَّمِيمِيُّ الْوَاعِظُ وَيُعْرَفُ بِابْنِ الْمُذَهَّبِ، قِرَاءَةً مِنْ أَصْلِ سَمَاعِهِ، قَالَ: أَخْبَرَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ جَعْفَرِ بْنِ حَمْدَانَ بْنِ مَالِكٍ الْقَطِيعِيُّ، قِرَاءَةً عَلَيْهِ، قَالَ
حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُحَمَّدِ بْنِ حَئْبَلٍ، قَالَ : حَدَّثَنِي أَبِي أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلِ بْنِ هِلَالِ بْنِ أَسَدٍ مِنْ كِتَابِهِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسٍ، قَالَ:
قَامَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تَقْرَؤونَ هَذِهِ الْآيَةَ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105] ، وَإِنَّا سَمِعْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الْمُنْكَرَ فَلَمْ يُغيرُوهُ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمُ اللَّهُ بِعِقَابِهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-1.
Musnad-Ahmad-Alamiah-1.
Musnad-Ahmad-JawamiulKalim-1.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்.
2 . அப்துல்லாஹ் பின் நுமைர்.
3 . இஸ்மாயீல் பின் அபூகாலித்.
4 . கைஸ் பின் அபூஹாஸிம்-கைஸ் பின் அவ்ஃப்.
5 . அபூபக்ர் (ரலி).
மேலும் பார்க்க: இப்னு மாஜா-4005 .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
அல்ஹம்துலில்லாஹ்….
நல்ல பனியில் இருக்கின்றீர்கள்..
அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் ஈருலக நன்மையை தருவானாக..ஆமீன்.
இமாம் இப்னு கஸீர் அவர்களின்
*பிதாயா வ நிஹாயா* என்கிற நூலை பதிவிறக்கம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் ..