தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-11370

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறவில்லையோ அவருக்கு உளூ நிறைவேறாது.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 11370)

حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنِي كَثِيرُ بْنُ زَيْدٍ اللَّيْثِيُّ، قَالَ: حَدَّثَنِي رُبَيْحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيُّ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرْ اسْمَ اللَّهِ عَلَيْهِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-11370.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-11155.




إسناد ضعيف فيه ربيح بن عبد الرحمن الخدري وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ருபைஹ் பின் அப்துர்ரஹ்மான் பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்கள், முன்கருல் ஹதீஸ் (ஹதீஸ்கலையில் நிராகரிக்கப்பட்டவர்) என்று கூறியதாக திர்மிதீ இமாம் அவர்கள் கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1 / 589 , அல்இலலுல் கபீர்-பக்: 33, எண்:18)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

4 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-14 , அஹ்மத்-11370 , 11371 , தாரிமீ-718 , இப்னு மாஜா-397 , முஸ்னத் அபீ யஃலா-1060 , 1221 , தாரகுத்னீ-223 , ஹாகிம்-520 , குப்ரா பைஹகீ-192 ,

மேலும் பார்க்க: அஹ்மத்-16651 .

2 comments on Musnad-Ahmad-11370

  1. இதே செய்தி ஜமி உத் திர்மிதீ-25 பதிவு செய்யப்பட்டுள்ளது

    இந்த செய்தியிலும் ருபைஹ் இப்னு அப்துல் ரகுமான் இடம் பெறுகிறார்

    ஆனால் ஜமி உத் திர்மிதீயில் அந்த செய்தியின் கீழ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் (இமாம் புகாரி) கருத்து பதிவு செய்யபட்டுள்ளது

    இந்த தலைப்பில் மிக சிறந்த விஷயம் ருபைஹ் இப்னு அப்துல் ரகுமானின் ஹதீஸாகும் என்று கூறினார்கள்

    ருபைஹ் இப்னு அப்துல் ரகுமான் பற்றி அவர்கள் நல்லவிதமாக கூறியதாக ஜமி உத் திர்மிதீ-25 ஹதீஸ் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது…ஆனால் நீங்கள் அதற்கு மாற்றமாக கூறுகிறீர்கள் ….இதில் எது சரியானது சகோதரரே?

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ருபைஹ் அல்ல. ரபாஹ் பின் அப்துர்ரஹ்மான். இருவரும் வேறு நபர்கள். ஸயீத் பின் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகளை இன்னும் பதிவு செய்யவில்லை. இன்ஷா அல்லாஹ் அதில் இதைப்பற்றிய தகவல் பதிவுசெய்யப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.