தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-16042

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ்கள்.

….மக்கள் (அல்லது அடியார்கள்) நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக, ஒன்றுமில்லாதவர்களாக மறுமை நாளில் அல்லாஹ்விடம் ஒன்றுதிரட்டிக்கொண்டு வரப்படுவார்கள்….

(சொர்க்கவாசிகளால் உலகில் பாதிப்படைந்த) நரகவாசிகளில் எவரும் அவரின் உரிமைக்காக நான் சொர்க்கவாசிகளை பழிதீர்த்த பின்பே நரகத்தில் நுழையமுடியும்.

(நரகவாசிகளால் உலகில் பாதிப்படைந்த) சொர்க்கவாசிகளில் எவரும் அவரின் உரிமைக்காக நான் நரகவாசிகளை பழிதீர்த்த பின்பே சொர்க்கத்தில் நுழையமுடியும்…என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்…

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி)

 

(முஸ்னது அஹ்மத்: 16042)

حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ أُنَيْسٍ

حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الْوَاحِدِ الْمَكِّيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ:

بَلَغَنِي حَدِيثٌ عَنْ رَجُلٍ سَمِعَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاشْتَرَيْتُ بَعِيرًا، ثُمَّ شَدَدْتُ عَلَيْهِ رَحْلِي، فَسِرْتُ إِلَيْهِ شَهْرًا، حَتَّى قَدِمْتُ عَلَيْهِ الشَّامَ فَإِذَا عَبْدُ اللَّهِ بْنُ أُنَيْسٍ، فَقُلْتُ لِلْبَوَّابِ: قُلْ لَهُ: جَابِرٌعَلَى الْبَابِ، فَقَالَ ابْنُ عَبْدِ اللَّهِ؟ قُلْتُ: نَعَمْ، فَخَرَجَ يَطَأُ ثَوْبَهُ فَاعْتَنَقَنِي، وَاعْتَنَقْتُهُ، فَقُلْتُ: حَدِيثًا بَلَغَنِي عَنْكَ أَنَّكَ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقِصَاصِ، فَخَشِيتُ أَنْ تَمُوتَ، أَوْ أَمُوتَ قَبْلَ أَنْ أَسْمَعَهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ – أَوْ قَالَ: الْعِبَادُ – عُرَاةً غُرْلًا بُهْمًا ” قَالَ: قُلْنَا: وَمَا بُهْمًا؟ قَالَ: ” لَيْسَ مَعَهُمْ شَيْءٌ، ثُمَّ يُنَادِيهِمْ بِصَوْتٍ يَسْمَعُهُ مِنْ بُعْدٍ كَمَا يَسْمَعُهُ مِنْ قُرْبٍ: أَنَا الْمَلِكُ، أَنَا الدَّيَّانُ، وَلَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ أَهْلِ النَّارِ، أَنْ يَدْخُلَ النَّارَ، وَلَهُ عِنْدَ أَحَدٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ حَقٌّ، حَتَّى أَقُصَّهُ مِنْهُ، وَلَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ أَنْ يَدْخُلَ الْجَنَّةَ، وَلِأَحَدٍ مِنْ أَهْلِ النَّارِ عِنْدَهُ حَقٌّ، حَتَّى أَقُصَّهُ مِنْهُ، حَتَّى اللَّطْمَةُ ” قَالَ: قُلْنَا: كَيْفَ وَإِنَّا إِنَّمَا نَأْتِي اللَّهَ عَزَّ وَجَلَّ عُرَاةً غُرْلًا بُهْمًا؟ قَالَ: «بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-16042.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-15711.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அகீல் அவர்கள் பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்கள் முகாரபுல் ஹதீஸ்-ஹஸன் தரம் என்று கூறியுள்ளார். அவரின் மாணவர் திர்மிதீ அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றலில் குறையுள்ளவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • மற்ற அறிஞர்களில் சிலர் இவர் பலவீனமானவர் என்றும், சிலர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், சிலர் நிராகரிக்கப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/424 )
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் தனித்து அறிவித்தால் அது ஹஸன் தரம் என்றும், மற்ற பலமான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக அறிவித்தால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளார். (நூல்: தல்கீஸ்)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்னத் இப்னு அபீ ஷைபா-851 , அஹ்மத்-16042 , அல்அதபுல் முஃப்ரத்-970 , அல்முஃஜமுல் கபீர்-331 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8593 , ஹாகிம்-8715 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.