அபூஉமைர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எனது தந்தையின் உடன்பிறந்த (சில) அன்ஸாரீ நபித்தோழர்கள் எனக்கு அறிவித்தனர்:
மேகம் காரணமாக எங்களுக்கு ஷவ்வால் பிறை தெரியவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைந்தோம். அப்போது ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினர்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (எங்களது) நோன்பை விடுமாறும் (எங்களது) தொழும் திடலுக்கு (நாங்கள்) மறுநாள் செல்லுமாறும் கட்டளையிட்டார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 20584)حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسٍ، قَالَ: حَدَّثَنِي عُمُومَةٌ لِي مِنَ الْأَنْصَارِ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«غُمَّ عَلَيْنَا هِلَالُ شَوَّالٍ، فَأَصْبَحْنَا صِيَامًا، فَجَاءَ رَكْبٌ مِنْ آخِرِ النَّهَارِ، فَشَهِدُوا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُمْ رَأَوْا الْهِلَالَ بِالْأَمْسِ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُفْطِرُوا مِنْ يَوْمِهِمْ، وَأَنْ يَخْرُجُوا لِعِيدِهِمْ مِنَ الْغَدِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20584.
Musnad-Ahmad-Alamiah-19675.
Musnad-Ahmad-JawamiulKalim-20091.
குறிப்பு:
“உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (எங்களது) நோன்பை விடுமாறும் (எங்களது) தொழும் திடலுக்கு (நாங்கள்) மறுநாள் செல்லுமாறும் கட்டளையிட்டார்கள்”
இந்த வாக்கியத்தில் (எங்களது), (நாங்கள்) என்று தமிழாக்கம் செய்ததின் காரணம், இதை அறிவிப்பவர் தனது தந்தையின் சகோதர்கள் கூறியதாக குறிப்பிடுகிறார். இது படர்க்கை ஆகும். அதனடிப்படையில் தான் அரபு வழக்கில் இவ்வாறு படர்க்கையாக கூறப்பட்டுள்ளது.
மேலும், நேற்றே பிறையைப் பார்த்த வாகனக் கூட்டத்தினர் நோன்பு வைத்திருக்க மாட்டார்கள். காரணம் பிறையை பார்த்தால் நோன்பு வைக்க வேண்டும் என்ற கட்டளையை அறிந்தவர்கள், பிறையை பார்த்தால் நோன்பை விட வேண்டும் என்றும் அறிந்திருப்பார்கள்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . ஹுஷைம் பின் பஷீர்
3 . அபூபிஷ்ர்-ஜஃபர் பின் இயாஸ்
4 . அபூஉமைர் பின் அனஸ்-அப்துல்லாஹ் பின் அனஸ் பின் மாலிக்
5 . சில அன்ஸாரீ நபித்தோழர்கள்
அபூஉமைர் பின் அனஸ் யார்?
…
சில அன்ஸாரீ நபித்தோழர்கள்
…
1 . இந்தச் செய்தியை ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.போன்ற பலரும், ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
—> அபூபிஷ்ர் —> அபூஉமைர் பின் அனஸ் —> சில அன்ஸாரீ நபித்தோழர்கள் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
2 . ஆனால் ஸயீத் பின் ஆமிர் அவர்கள் மட்டும், ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
—> கதாதா —> அனஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இது தவறு என புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
திர்மிதீ, பஸ்ஸார், தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.
3 . அபூபிஷ்ர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹுஷைம், அபூஅவானா அவர்களும் அபூபிஷ்ர் —> அபூஉமைர் பின் அனஸ் —> சில அன்ஸாரீ நபித்தோழர்கள் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். எனவே இந்த அறிவிப்பாளர்தொடர் தான் சரியானது என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இது பற்றி விளக்கியுள்ளார்.
(நூல்கள்: இலலுத் திர்_மிதீ-193, இலலுல் ஹதீஸ்-683, அல்இலலுல் வாரிதா-2523, பஸ்ஸார்-, )
1 . இந்தக் கருத்தில் பெயர் குறிப்பிடப்படாத சில நபித்தோழர்கள் வழியாக வரும் செய்திகள்:
- அபூபிஷ்ர் —> அபூஉமைர் பின் அனஸ் —> தந்தையின் உடன்பிறந்த சகோதரர்கள் (சில நபிதோழர்கள்)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7339, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-20584, 20579, இப்னு மாஜா-1653, அபூதாவூத்-1157, குப்ரா நஸாயீ-, நஸாயீ-1557, அல்முன்தகா-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, தாரகுத்னீ-2204, ஸகீர் பைஹகீ-1314, 1315, 1316, குப்ரா பைஹகீ-6283, 8198,
- யஃகூப் பின் இப்ராஹீம் —> ஸயீத் பின் ஆமிர் —> ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
—> கதாதா —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-13974, முஸ்னத் பஸ்ஸார்-7164, இப்னு ஹிப்பான்-3456, குப்ரா பைஹகீ-, அல்அஹாதீஸுல் முக்தாரா-,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-1909, திர்மிதீ-691, 697,
அஸ்ஸலாமு அலைக்கும்
யஃகூப் பின் இப்ராஹீம் —> ஸயீத் பின் ஆமிர் —> ஷுஅபா
—> கதாதா —> அனஸ் (ரலி)
இந்த தொடர் ஹதீஸை பதியவும்.
வ அலைக்கும் ஸலாம். இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.