ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் செவியேற்றேன்.
நபி (ஸல்) அவர்கள், “இந்த மார்க்கம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வரும் வரை (இஸ்லாத்தின்) எதிரிகளை எதிர்த்து மேலோங்கி இருந்துவரும். (இந்த மார்க்கத்தை பின்பற்றுவோருக்கு) மாறு செய்வோரும், இவர்களை விட்டு பிரிந்து சென்றோரும் மார்க்கத்துக்கு எந்த தீங்கும் செய்துவிடமுடியாது. (இது பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வரை தொடரும்)” என்று கூறினார்கள்.
பிறகு ஏதோ சொன்னார்கள். மக்கள் (பேசிக் கொண்டிருந்ததால்) அது எனக்கு புரியவில்லை. எனவே, நான் என் தந்தையிடம், “நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு என் தந்தை, “அவர்கள் (அதாவது அந்த பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்) அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சொன்னார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 20814)حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ، حَدَّثَنَا مُجَالِدٌ، عَنْ عَامِرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ السُّوَائِيِّ، قَالَ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ فِي حَجَّةِ الْوَدَاعِ: «إِنَّ هَذَا الدِّينَ لَنْ يَزَالَ ظَاهِرًا عَلَى مَنْ نَاوَأَهُ، لَا يَضُرُّهُ مُخَالِفٌ، وَلَا مُفَارِقٌ، حَتَّى يَمْضِيَ مِنْ أُمَّتِي اثْنَا عَشَرَ خَلِيفَةً» ، قَالَ: ثُمَّ تَكَلَّمَ بِشَيْءٍ لَمْ أَفْهَمْهُ، فَقُلْتُ لِأَبِي: مَا قَالَ؟ قَالَ: «كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20814.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
لا يزال هذا الدين ظاهرا من رواية علي رضي الله عنه இந்த ஹதீஸீன் அறிவிப்பாளர் அலி ரலி என்று வருகிறது
قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: لا يزال هذا الدين ظاهرًا على كل من ناوأه حتى يقوم الدين وأهله ظاهرون என்ற ஹதீஸ் அலி ரலி அறிவித்ததாக தபக்காத் இப்னு சாத் உஸ்துலகபாவில் வருகிறது இந்த ஹதீஸ் எங்களை கொஞ்சம் எனக்கு அனுப்பி வையுங்கள்
ஜஸாகல்லாஹு கைரா. இன்ஷா அல்லாஹ் பார்க்கிறோம்.
நீங்கள் நூலிலிருந்து எடுத்தீர்களா அல்லது வேறு வெப்சைட்டிலிருந்து எடுத்தீர்களா? வெப்சைட் லின்க் பதிவிடவும்.
جامع الأحاديث (25/ 192 بترقيم الشاملة آليا):
وعلى فى القوم لم يتكلم قال أبو بكر ماذا ترى يا أبا الحسن فقال أرى أنك إن سرت إليهم بنفسك أو بعثت إليهم نصرت عليهم إن شاء الله فقال بشرك الله بخير ومن أين علمت ذلك قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يزال هذا الدين ظاهرا على كل من ناوأه حتى يقوم الدين وأهله ظاهرون فقال سبحان الله ما أحسن هذا الحديث لقد سررتنى به سرك الله
(தாரீகு திமிஷ்க்-2/64, ஜாமிஉல் ஹதீஸ்-27855, 25/192)
நீங்கள் கேட்ட செய்தி, அபூபக்ர் (ரலி) அவர்கள் ரோம் நாட்டுக்கு படை அனுப்ப இருக்கும்போது அது பற்றி நபித்தோழர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் இதைக் கூறினார்கள் என்ற தகவல் உள்ளது.
பொருள்: இந்த மார்க்கம் மறுமைநாள் வரை அதன் விரோதிகளை மிகைத்தே இருந்துவரும். மார்க்கமுடையோர் மிகைத்தே இருப்பார்கள்.