தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22251

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், எவருக்காவது பரிந்துரைச் செய்ததால் அவர் தரும் அன்பளிப்பை இவர் ஏற்றுக்கொண்டால், இவர் வட்டியின் வாசல்களில் மிகப்பெரும் ஒரு வாசலை வந்தடைந்தவராவார்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 22251)

حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ، عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ شَفَعَ لِأَحَدٍ شَفَاعَةً، فَأَهْدَى لَهُ هَدِيَّةً فَقَبِلَهَا، فَقَدْ أَتَى بَابًا عَظِيمًا مِنَ الرِّبَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22251.
Musnad-Ahmad-Alamiah-21221.
Musnad-Ahmad-JawamiulKalim-21664.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . ஹஸன் பின் மூஸா

3 . இப்னு லஹீஆ

4 . உபைதுல்லாஹ் பின் அபூஜஃபர்

5 . காலித் பின் அபூஇம்ரான்

6 . காஸிம் பின் அப்துர்ரஹ்மான்

7 . அபூஉமாமா (ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி காஸிம் பின் அப்துர்ரஹ்மான் என்பவரை சிலர் பலமானவர் என்றும் சிலர் பலவீனமானவர்; முன்கராக அறிவிப்பவர் என்றும் விமர்சித்துள்ளனர். இவர் மட்டுமே இந்தச் செய்தியை தனித்து அறிவித்துள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


மேலும் பார்க்க: அபூதாவூத்-3541.

2 comments on Musnad-Ahmad-22251

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.