தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22489

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

“(முஸ்லிம்கள்) ஆயுதமேந்திய, மாறுபட்ட படையினராக மாறும் நிலை (பிற்காலத்தில்) ஏற்படும். ஒரு படையினர் ஷாமில் இருப்பார்கள். மற்றொரு படையினர் யமன் நாட்டில் இருப்பார்கள். மற்றொரு படையினர் ஈராக்கில் இருப்பார்கள். அவற்றில் எது முதலில் உருவாகும் என்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

நீங்கள் ஷாமுடன் இணைந்துக் கொள்ளுங்கள். அறிந்துக் கொள்ளுங்கள்! நீங்கள் ஷாமுடன் இணைந்துக் கொள்ளுங்கள். அறிந்துக் கொள்ளுங்கள்! நீங்கள் ஷாமுடன் இணைந்துக் கொள்ளுங்கள். அதை வெறுப்பவர் யமன் நாட்டின் படையுடன் சேர்ந்துக் கொள்ளட்டும். உங்களுக்கென்றுள்ள நீர் தடாகத்திலிருந்து தண்ணீர் அருந்துங்கள். (அதாவது மற்ற முஸ்லிம்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே தங்களை தயார் செய்துக் கொள்ளுங்கள்)…

திண்ணமாக அல்லாஹ், எனக்காக ஷாமுக்கும், ஷாம்வாசிகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை ஸுலைமான் பின் ஸுமைர் (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 22489)

حَدَّثَنَا عِصَامُ بْنُ خَالِدٍ، وَعَلِيُّ بْنُ عَيَّاشٍ قَالَا: حَدَّثَنَا حَرِيزٌ، عَنْ سُلَيْمَانَ بْنِ سُمَيْرٍ، عَنِ ابْنِ حَوَالَةَ الْأَزْدِيِّ، وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:

«سَيَكُونُ أَجْنَادٌ مُجَنَّدَةٌ شَامٌ وَيَمَنٌ وَعِرَاقٌ، وَاللَّهُ أَعْلَمُ بِأَيِّهَا بَدَأَ، وَعَلَيْكُمْ بِالشَّامِ، أَلَا وَعَلَيْكُمْ بِالشَّامِ، أَلَا وَعَلَيْكُمْ بِالشَّامِ، فَمَنْ كَرِهَ فَعَلَيْهِ بِيَمَنِهِ وَلْيَسْقِ مِنْ غُدُرِهِ؛ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ تَوَكَّلَ لِي بِالشَّامِ وَأَهْلِهِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22489.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21899.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17959-ஸுலைமான் பின் ஸுமைர் (ஸல்மான் பின் ஷுமைர்) என்பவரின் தரம்:
  • புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஆகியோர் இவர் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி), அபூஉமாமா (ரலி) ஆகியோரிடமிருந்து அறிவித்துள்ளார். இவரிடமிருந்து ஹரீஸ் பின் உஸ்மான் அறிவித்துள்ளார் என்ற தகவலை மட்டுமே கூறியுள்ளனர்.
  • அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள், ஹரீஸ் பின் உஸ்மான் அவர்களின் ஆசிரியர்கள் அனைவரும் பலமானவர்கள் என்று கூறியுள்ளார். இதனடிப்படையில் இவரும் அதில் கட்டுப்படுவார் என்பதால் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள், இவரை பலமானவர் என்று கூறியுள்ளார்.
  • மிஸ்ஸீ இமாம் அவர்கள், இவரின் ஆசிரியர்களில் அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி), அபுத்தர்தா (ரலி) போன்ற நபித்தோழர்களையும் வேறு சிலரையும் குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-11/243, தஹ்தீபுத் தஹ்தீப்-2/68, தக்ரீபுத் தஹ்தீப்-1/397)


மேலும் பார்க்க: குப்ரா பைஹகீ-18609.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.