தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22882

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூஸைத்-அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் இரு தோள்புஜங்களுக்கிடையில் நபித்துவ முத்திரையை (ஒரு மனிதர் ஆச்சரியமாக பார்ப்பது போன்று) நான் பார்த்தேன். மேலும் அதை எனது கையால் தொட்டும் பார்த்தேன்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூநஹீக் கூறுகிறார்:

அபூஸைத் (ரலி) அவர்கள் இதைக் கூறும்போது தனது மூன்றாவது விரலால் இவ்வாறு (தொட்டுப்பார்த்தேன்) என்று செய்துக் காட்டினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 22882)

حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنِي حُسَيْنُ بْنُ وَاقِدٍ قَالَ: سَمِعْتُ أَبَا نَهِيكٍ يَقُولُ: سَمِعْتُ أَبَا زَيْدٍ عَمْرَو بْنَ أَخْطَبَ قَالَ:

«رَأَيْتُ الْخَاتَمَ الَّذِي بَيْنَ كَتِفَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَرَجُلٍ، قَالَ بِإِصْبَعِهِ الثَّالِثَةِ هَكَذَا، فَمَسَحْتُهُ بِيَدِي»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22882.
Musnad-Ahmad-Alamiah-21812.
Musnad-Ahmad-JawamiulKalim-22286.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . ஸைத் பின் ஹுபாப்

3 . ஹுஸைன் பின் வாகித்

4 . அபூநஹீக்-உஸ்மான் பின் நஹீக்

5 . அபூஸைத்-அம்ர் பின் அக்தப் (ரலி)


மேலும் பார்க்க: அஹ்மத்-22889.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.