அப்துர்ரஹ்மான் பின் ஃகன்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் தனது கூட்டத்தாரை ஒன்று திரட்டி இவ்வாறு கூறினார்கள்: “அஷ்அரீ குல மக்களே! நீங்களும் உங்கள் மனைவியரும் பிள்ளைகளும் ஒன்று சேருங்கள்; மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்த தொழுகையை உங்களுக்கு நான் கற்றுத் தருகிறேன்.” அவ்வாறே அவர்களும் தங்கள் மனைவியரையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு ஒன்று கூடினர்.
அப்போது அவர் உளூச் செய்து, எப்படி உளூச் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் காட்டினார். அதன் உறுப்புகளை முறையாகக் கழுவி உளுவை நிறைவு செய்தார். சூரியன் நடுஉச்சியில் வந்து நிழல் சாய்ந்தபோது அவர் எழுந்து நின்று பாங்கு சொன்னார். ஆண்களை முன் வரிசையிலும், சிறுவர்களை அவர்களுக்குப் பின்னாலும், பெண்களைச் சிறுவர்களுக்குப் பின்னாலும் வரிசைப்படுத்தினார்.
பிறகு இகாமத் சொல்லி, முன்னால் வந்து, கைகளை உயர்த்தி ‘அல்லாஹு அக்பர்’ என்று தக்பீர் கூறினார். பிறகு ஸூரத்துல் ஃபாத்திஹா ஓதி, ஒரு ஸூராவையும் ஓதினார் (இவை இரண்டையும் இரகசியமாக ஓதினார்).
பிறகு தக்பீர் கூறி ருகூஃ செய்து, “ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி” என்று மூன்று முறை கூறினார். பிறகு “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறி நிமிர்ந்து நின்றார். பிறகு தக்பீர் கூறி ஸஜ்தாவில் விழுந்தார். பிறகு தக்பீர் கூறி தலையை உயர்த்தினார். மீண்டும் தக்பீர் கூறி ஸஜ்தா செய்தார். பிறகு தக்பீர் கூறி எழுந்து நின்றார். முதல் ரக்அத்தில் அவர் சொன்ன தக்பீர்கள் மொத்தம் ஆறு ஆகும்.
இரண்டாவது ரக்அத்திற்கு எழுந்தபோது தக்பீர் கூறினார். அவர் தொழுது முடித்ததும், தனது கூட்டத்தாரை நோக்கித் திரும்பி, “எனது தக்பீர்களை நினைவில் கொள்ளுங்கள், எனது ருகூவையும் ஸஜ்தாவையும் கற்றுக்கொள்ளுங்கள்; இதுவே நபி (ஸல்) அவர்கள் பகலின் இந்த நேரத்தில் எங்களுக்குத் தொழுவித்த தொழுகையாகும்” என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் தங்கள் தொழுகையை முடித்ததும், மக்களை நோக்கித் திரும்பி இவ்வாறு கூறினார்கள்: “மக்களே! கேளுங்கள், சிந்தித்துப் புரிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வுக்குச் சில அடியார்கள் இருக்கிறார்கள்; அவர்கள் நபிமார்களும் அல்ல, ஷஹீதுகளும் அல்ல. அவர்களின் அந்தஸ்தையும் அல்லாஹ்விடம் அவர்களுக்கு இருக்கும் நெருக்கத்தையும் கண்டு நபிமார்களும் ஷஹீதுகளும் பொறாமை கொள்வார்கள் (அதாவது அவர்களின் சிறப்பைக் கண்டு வியப்பார்கள்).”
அப்போது கூட்டத்தின் ஓரத்திலிருந்த கிராமவாசி ஒருவர் எழுந்து, நபி (ஸல்) அவர்களை நோக்கித் தன் கையை நீட்டி, “அல்லாஹ்வின் நபியே! நபிமார்களும் அல்ல, ஷஹீதுகளும் அல்லாத ஒரு கூட்டத்தாரை, நபிமார்களும் ஷஹீதுகளும் அவர்களின் அந்தஸ்தைக் கண்டு வியக்கிறார்கள் என்றால், அவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரிவியுங்கள், அவர்களை எங்களுக்கு வர்ணனை செய்து காட்டுங்கள்” என்று கேட்டார்.
அந்த கிராமவாசியின் கேள்வியைக் கேட்டு நபி (ஸல்) அவர்களின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அவர்கள் வெவ்வேறு கோத்திரங்களைச் சேர்ந்த, இரத்த உறவுகள் ஏதுமற்ற சாதாரண மக்கள் ஆவர். அவர்கள் அல்லாஹ்வுக்காக ஒருவரை ஒருவர் நேசித்துக் கொண்டார்கள். மனப்பூர்வமாகத் தோழமை பாராட்டியவர்கள். மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுக்காக ஒளியால் ஆன மேடைகளை அமைத்து, அதன் மீது அவர்களை அமர வைப்பான். அவர்களின் முகங்களையும் உடைகளையும் ஒளியாக ஆக்குவான். மக்கள் அனைவரும் அச்சப்படும் அந்நாளில், அவர்கள் அச்சப்பட மாட்டார்கள். அவர்களே அல்லாஹ்வின் நேசர்கள். அவர்களுக்கு எந்த பயமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 22906)حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَهْرَامَ الْفَزَارِيُّ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ،
أَنَّ أَبَا مَالِكٍ الْأَشْعَرِيَّ جَمَعَ قَوْمَهُ فَقَالَ: ” يَا مَعْشَرَ الْأَشْعَرِيِّينَ اجْتَمِعُوا وَاجْمَعُوا نِسَاءَكُمْ، وَأَبْنَاءَكُمْ أُعَلِّمْكُمْ صَلَاةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي صَلَّى لَنَا بِالْمَدِينَةِ فَاجْتَمَعُوا، وَجَمَعُوا نِسَاءَهُمْ وَأَبْنَاءَهُمْ، فَتَوَضَّأَ وَأَرَاهُمْ كَيْفَ يَتَوَضَّأُ، فَأَحْصَى الْوُضُوءَ إِلَى أَمَاكِنِهِ حَتَّى لَمَّا أَنْ فَاءَ الْفَيْءُ، وَانْكَسَرَ الظِّلُّ قَامَ، فَأَذَّنَ فَصَفَّ الرِّجَالَ فِي أَدْنَى الصَّفِّ، وَصَفَّ الْوِلْدَانَ خَلْفَهُمْ، وَصَفَّ النِّسَاءَ خَلْفَ الْوِلْدَانِ، ثُمَّ أَقَامَ الصَّلَاةَ، فَتَقَدَّمَ فَرَفَعَ يَدَيْهِ وَكَبَّرَ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ يُسِرُّهُمَا، ثُمَّ كَبَّرَ فَرَكَعَ فَقَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ ثَلَاثَ مِرَارٍ، ثُمَّ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، وَاسْتَوَى قَائِمًا، ثُمَّ كَبَّرَ، وَخَرَّ سَاجِدًا، ثُمَّ كَبَّرَ فَرَفَعَ رَأْسَهُ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ، ثُمَّ كَبَّرَ فَانْتَهَضَ قَائِمًا، فَكَانَ تَكْبِيرُهُ فِي أَوَّلِ رَكْعَةٍ سِتَّ تَكْبِيرَاتٍ، وَكَبَّرَ حِينَ قَامَ إِلَى الرَّكْعَةِ الثَّانِيَةِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ أَقْبَلَ إِلَى قَوْمِهِ بِوَجْهِهِ، فَقَالَ: احْفَظُوا تَكْبِيرِي، وَتَعَلَّمُوا رُكُوعِي وَسُجُودِي؛ فَإِنَّهَا صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي كَانَ يُصَلِّي لَنَا كَذَي السَّاعَةِ مِنَ النَّهَارِ “
ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَضَى صَلَاتَهُ أَقْبَلَ إِلَى النَّاسِ بِوَجْهِهِ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ اسْمَعُوا وَاعْقِلُوا، وَاعْلَمُوا أَنَّ لِلَّهِ عِبَادًا لَيْسُوا بِأَنْبِيَاءَ وَلَا شُهَدَاءَ يَغْبِطُهُمْ، النَّبِيُّونَ وَالشُّهَدَاءُ عَلَى مَجَالِسِهِمْ وَقُرْبِهِمْ مِنَ اللَّهِ» . فَجَثَى رَجُلٌ مِنَ الْأَعْرَابِ مِنْ قَاصِيَةِ النَّاسِ، وَأَلْوَى بِيَدِهِ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ نَاسٌ مِنَ النَّاسِ لَيْسُوا بِأَنْبِيَاءَ وَلَا شُهَدَاءَ يَغْبِطُهُمُ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ عَلَى مَجَالِسِهِمْ وَقُرْبِهِمْ مِنَ اللَّهِ انْعَتْهُمْ لَنَا حَلِّمْهُمْ لَنَا، يَعْنِي صِفْهُمْ لَنَا، شَكِّلْهُمْ لَنَا فَسُرَّ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِسُؤَالِ الْأَعْرَابِيِّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُمْ نَاسٌ مِنْ أَفْنَاءِ النَّاسِ وَنَوَازِعِ الْقَبَائِلِ لَمْ تَصِلْ بَيْنَهُمْ أَرْحَامٌ مُتَقَارِبَةٌ تَحَابُّوا فِي اللَّهِ وَتَصَافَوْا، يَضَعُ اللَّهُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ مَنَابِرَ مِنْ نُورٍ فَيُجْلِسُهُمْ عَلَيْهَا فَيَجْعَلُ وُجُوهَهُمْ نُورًا، وَثِيَابَهُمْ نُورًا، يَفْزَعُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَفْزَعُونَ، وَهُمْ أَوْلِيَاءُ اللَّهِ الَّذِينَ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22906.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியை ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அவர்கள் வழியாக அறிவிப்பவர்கள் பலதரப்பட்ட வார்த்தை அமைப்பில் அறிவித்துள்ளனர்.
ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அவர்களை சில முக்கிய அறிஞர்கள் பலமானவர் என்று கூறியுள்ளனர். வேறு சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
இவரிடமிருந்து அப்துல்ஹமீத் பின் பஹ்ராம் அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் சிலர் கூறியுள்ளனர்…
2 . இந்தக் கருத்தில் அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்ஹமீத் பின் பஹ்ராம் —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> அப்துர்ரஹ்மான் பின் ஃகன்ம் —> அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.(ரலி)
பார்க்க: அஹ்மத்-22906, 22896, அல்முஃஜமுல் கபீர்-3421, 3422,
- கதாதா —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —>
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்- 2499, அஹ்மத்- 22893, 22898, 22901, அல்முஃஜமுல் கபீர்- 3411, 3412, 3413, 3414,
- தாவூத் பின் அபூஹிந்த் —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —>
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 2490, அஹ்மத்- 22913,
- லைஸ் —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —>
பார்க்க: அஹ்மத்- 22901, இப்னு மாஜா- 417, முஸ்னத் ஹாரிஸ்-151, ஜுஸ்உ அபூஅரூபா-55,
- புதைல் பின் மைஸரா —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —>
பார்க்க: அஹ்மத்- 22918, அபூதாவூத்-677, ஷரஹ் மஆனில் ஆஸார்- 1610, அல்முஃஜமுல் அவ்ஸத்- 4233, அல்முஃஜமுல் கபீர்- 3416, குப்ரா பைஹகீ- 5165,
மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3686.
சமீப விமர்சனங்கள்