தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22946

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதற்கும் சகுனம் பார்த்ததில்லை. அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றால் அதன் பெயரைப் பற்றி விசாரிப்பார்கள். அதன் பெயர் அழகாக இருந்தால் அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயர் அருவெறுப்பாக இருந்தால் அதனால் அவர்களுடைய முகத்தில் வெறுப்பு தென்படும்.

(வரிவாங்குவதற்கு) அதிகாரியை அவர்கள் அனுப்பும் போது அவருடையப் பெயரைப் பற்றிக் கேட்பார்கள். அவருடையப் பெயர் அழகாக இருந்தால்  அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அவருடைய பெயர் அருவெறுப்பாக இருந்தால் அதனால் அவர்களுடைய முகத்தில் வெறுப்பு தென்படும். 

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 22946)

حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ:

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَتَطَيَّرُ مِنْ شَيْءٍ، وَلَكِنَّهُ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَرْضًا سَأَلَ عَنْ اسْمِهَا، فَإِنْ كَانَ حَسَنًا رُئِيَ الْبِشْرُ فِي وَجْهِهِ، وَإِنْ كَانَ قَبِيحًا رُئِيَ ذَلِكَ فِي وَجْهِهِ، وَكَانَ إِذَا بَعَثَ رَجُلًا سَأَلَ عَنْ اسْمِهِ، فَإِنْ كَانَ حَسَنَ الِاسْمِ رُئِيَ الْبِشْرُ فِي وَجْهِهِ، وَإِنْ كَانَ قَبِيحًا رُئِيَ ذَلِكَ فِي وَجْهِهِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22946.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22343.




وقال الترمذي قال بعض أهل العلم لا نعرف لقتادة سماعا من عبد الله بن بريدة

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் கத்தாதா அவர்கள், அப்துல்லாஹ் பின் புரைதா அவர்களிடம் செவியேற்கவில்லை என சில அறிஞர்கள் கூறியதாக திர்மிதீ இமாம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : ஜாமிஉத் தஹ்ஸீல் எண்-633)
  • எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
  • இந்த செய்தியை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் ஹஸன் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.  (ஃபத்ஹுல் பாரீ-10/224)

سند حسن
فتح الباري شرح صحيح البخاري: (10 / 224)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-22946 , அபூதாவூத்-3920 , குப்ரா நஸாயீ-8771 , இப்னு ஹிப்பான்-5827 , குப்ரா பைஹகீ-16522 ,

மேலும் பார்க்க : புகாரி-5756 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.