அப்துல்லாஹ் பின் அபுல்ஹுதைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தங்கமும், வெள்ளியும் நாசமாகட்டும்! என்று கூறினார்கள்” என என்னுடைய தோழர் ஒருவர் கூறினார்.
மேலும் அவர் (இது பற்றி விவரம்) கூறினார்:
நான் ஒருமுறை உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களுடன் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தங்கமும் வெள்ளியும் நாசமாகட்டும் என்று தாங்கள் கூறியதற்கான காரணம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அது நல்லது என்றால்) இறைவனை தியானம் செய்யும் நாவையும், நன்றி செலுத்தும் இதயத்தையும், மறுமைக்கு உதவும் மனைவியையும் (தடுக்காது) என்று பதிலளித்தார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 23101)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنِي سَلْمٌ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي الْهُذَيْلِ قَالَ: حَدَّثَنِي صَاحِبٌ لِي، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«تَبًّا لِلذَّهَبِ وَالْفِضَّةِ» ، قَالَ: فَحَدَّثَنِي صَاحِبِي أَنَّهُ انْطَلَقَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قَوْلُكَ تَبًّا لِلذَّهَبِ وَالْفِضَّةِ مَاذَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِسَانًا ذَاكِرًا، وَقَلْبًا شَاكِرًا، وَزَوْجَةً تُعِينُ عَلَى الْآخِرَةِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23101.
Musnad-Ahmad-Alamiah-22022.
Musnad-Ahmad-JawamiulKalim-22499.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . முஹம்மத் பின் ஜஃபர்-ஃகுன்தர்
3 . ஷுஅபா
4 . ஸல்ம் பின் அதிய்யா-,
5 . அப்துல்லாஹ் பின் அபுல்ஹுதைல்
6 . ஒரு நபித்தோழர்
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17928-ஸல்ம் பின் அதிய்யா …
ஸல்ம் பின் அதிய்யாவை சிலர் விமர்சித்துள்ளனர் என்பதால் சிலர் இதை பலவீனமான செய்தி என்று கூறியுள்ளனர். இவரைப் பற்றிய விமர்சனம் சரியில்லை என்பதாலும், இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்பதாலும் இந்தச் செய்தியை ஹஸன் தரம் என்று அபூஸுஹைப்-ஹாயிக்-காலித் என்ற அறிஞர் கூறியுள்ளார்.
பார்க்க: ஸல்ம் பின் அதிய்யா.
ஆய்வுக்காக: سَلْم بن عطية ومُسلم بن عطية .
2 . இந்தக் கருத்தில் பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபித்தோழர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-23101, குப்ரா நஸாயீ-5326,
மேலும் பார்க்க: திர்மிதீ-3094.
சமீப விமர்சனங்கள்