அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வலீமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பது நல்லதாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது விளம்பரமும், முகஸ்துதியுமாகும்.
அறிவிப்பவர்: ஸுஹைர் பின் உஸ்மான் (ரலி)
இதில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும், ஸகீப் கிளையை சேர்ந்த கண் தெரியாத மனிதர் பற்றி நல்லவர் என்று கூறப்பட்டது (என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறினார்).
(முஸ்னது அஹ்மத்: 23152)حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ الثَّقَفِيِّ، عَنْ رَجُلٍ مِنْ ثَقِيفٍ أَعْوَرَ يُقَالُ لَهُ: مَعْرُوفٌ، وَأَثْنَى عَلَيْهِ خَيْرًا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْوَلِيمَةُ حَقٌّ، وَالْيَوْمُ الثَّانِي مَعْرُوفٌ، وَالْيَوْمُ الثَّالِثُ سُمْعَةٌ وَرِيَاءٌ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23152.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் உஸ்மான் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- மேலும் இதில் வரும் ஸுஹைர் பின் உஸ்மான் அவர்கள், நபித்தோழரா? இல்லையா? என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்துவேறுபாடு உள்ளது.
மேலும் பார்க்க: அபூதாவூத்-3745 .
சமீப விமர்சனங்கள்