தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23581

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது. அவை

1 . வாசனை திரவியம் பூசுவது.

2 . திருமணம் செய்வது.

3 . மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது)

4 . வெட்கம்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 23581)

حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنْ مَكْحُولٍ، وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ، عَنْ حَجَّاجٍ، عَنْ مَكْحُولٍ، قَالَ: قَالَ أَبُو أَيُّوبَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ: التَّعَطُّرُ، وَالنِّكَاحُ، وَالسِّوَاكُ، وَالْحَيَاءُ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23581.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22959.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11282-ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர், தத்லீஸ் செய்பவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/356)

இந்த செய்தியை அறிவிப்பாளரைக் கூட்டியும், குறைத்தும் அறிவித்து தவறு செய்துள்ளார்.

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-1080 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.