தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-24478

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் (பரக்கத் எனும்) இறையருளை பெற்றவள் என்பதற்கு அடையாளம், அவளை பெண் பேசுவது எளிதாக இருக்கும். அவளின் (மஹர் எனும்) திருமணக் கொடை(த் தொகை) எளிதாக இருக்கும். அவள் பிள்ளைப்பேறைப் பெறுவதும் எளிதாக இருக்கும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 24478)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا ابْنُ مُبَارَكٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنَّ مِنْ يُمْنِ الْمَرْأَةِ تَيْسِيرَ خِطْبَتِهَا، وَتَيْسِيرَ صَدَاقِهَا، وَتَيْسِيرَ رَحِمِهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-24478.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23918.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-6786-உஸாமா பின் ஸைத் அல்லைஸீ அவர்கள் இடம்பெறும் செய்திகளை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    போன்றோர் துணை சான்றாக கூறியுள்ளனர்.
  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் ஆரம்பத்தில் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்தாலும் பின்னால் அவரின் செய்திகளை நான் இனி அறிவிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். இவரின் கருத்தையே இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் போன்றோர் ஏற்றுள்ளனர்.
  • இமாம் இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    தஹாவீ பிறப்பு ஹிஜ்ரி 238
    இறப்பு ஹிஜ்ரி 321
    வயது: 83
    போன்றோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர். யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அவர்கள், இவர் மதீனாவாசிகளிடம் நம்பிக்கைக்குரிய, பலமானவர் என்று கூறியதாக பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் சில இடங்களில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவரின் செய்திகளை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    போன்றோர் துணை ஆதாரமாகக் கூறியுள்ளனர். எனவே இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் எனக் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1/108, தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/124, ஸியரு அஃலாமின் நுபலா-145)

تهذيب الكمال في أسماء الرجال (2/ 350)

وَقَال أبو أحمد بْن عدي (7) : يروي عنه الثوري، وجماعة من الثقات، ويروي عنه ابن وهب نسخة صالحة (8) ، وهو كما قال ابن مَعِين: ليس بحديثه بأس، وهو خير من أسامة بْن زيد بْن أسلم (9) .

(உஸாமா பின் ஸைத் அல்லைஸீ மனனத்திலிருந்து அறிவித்தால் தவறிழைப்பார் என்பதாலே அவரை சிலர் விமர்சித்துள்ளனர். அவர் நூலிலிருந்து அறிவித்தால் தவறு செய்யமாட்டார்) அவர் தன் நூலிலிருந்து அறிவிக்கும் செய்தியையே இப்னு வஹ்ப் அறிவிப்பார் என்று இப்னுஅதீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-2/350)

இந்த செய்தியை இப்னு வஹ்ப் அவர்களும் இவரிடமிருந்து அறிவித்துள்ளார். (பார்க்க: ஹாகிம்-2739)

இதில் கூறப்படும் உஸாமா பின் ஸைத் அவர்கள், உஸாமா பின் ஸைத் பின் அஸ்லம் என்று கூறி இந்தச் செய்தியை ஹைஸமீ அவர்கள் பலவீனம் என்று கூறியுள்ளார். என்றாலும் இவர் உஸாமா பின் ஸைத் அல்லைஸீ ஆவார் என்று ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் குறிப்பிட்டுவிட்டு இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.

1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-24478 , 24607 , இப்னு ஹிப்பான்-4095 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3612 , அல்முஃஜமுஸ் ஸகீர்-469 , ஹாகிம்-2739 , குப்ரா பைஹகீ-14357 ,

6 comments on Musnad-Ahmad-24478

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே, கீழ்காணும் தமிழாக்கம் சரியா?தயவுசெய்து விளக்கவும்.
    ஒரு பெண் பரகத் பொருந்தியவள் என்பதற்கு அடையாளம் அவளை பெண் பேசுவது இலகுவாக இருக்கும்,அவள் மஹர் தொகை இலகுவாக இருக்கும்,அவள் பிள்ளை பெற்றுக்கோள்வதற்கும் இலகுவாக்குவாள்.

    1. வ அலைக்கும் ஸலாம். சகோதரரே! கருத்து சரி. தமிழ் வார்த்தைகளை சரிபடுத்த வேண்டும். ஜஸாகல்லாஹு கைரா.

  2. يمن المرأة خفة مهرها ويسر نكاحها وحسن خلقها وشؤمها غلاء مهرها وعسر نكاحها وسوء خلقها
    மஹ்ர் தொகையை குறைவாகக் கேட்பதும், திருமணத்தை இலகுவாக்குவதும், நற்குணமும் பெண்ணுடைய சுபலட்சணம் ஆகும். மஹ்ர் தொகையை அதிகமாகக் கேட்பதும், திருமணத்தைக் கடினமாக்குவதும், தீய குணமும் பெண்ணுடைய அவலட்சணம் ஆகும்.”
    சலாம்,
    இந்த ஹதீஸ் குறித்து தரம் தேவை சகோதரரே…

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.
      قَالَ عُرْوَةُ : وَأَنَا أَقُولُ مِنْ عِنْدِي : مِنْ أَوَّلِ شُؤْمِهَا أَنْ يَكْثُرَ صَدَاقُهَا – இரண்டாவது பகுதி உர்வா அவர்களின் கூற்றாக வந்துள்ளது. பார்க்க: இப்னு ஹிப்பான்-4095.
      நீங்கள் கூறிய வாசகம் இராகீ அவர்களின் இஹ்யாவின் தக்ரீஜில் உள்ளது. அதை அவர் பலவீனமானது என்று கூறியுள்ளார்.அதற்கு முழு அறிவிப்பாளர்தொடர் இல்லை. ஃபிக்ஹ் சுன்னாவிலும் உள்ளது. அதில் அறிவிப்பாளர்தொடர் இல்லை.

      1. «تخريج أحاديث إحياء علوم الدين» (3/ 1230):
        «‌‌1845 – (قال صلى الله عليه وسلم اليمن والشؤم في المرأة والمسكن والفرس فيمن المرأة خفة مهرها ويسر نكاحها وحسن خلقها وشؤمها غلاء مهرها وعسر نكاحها وسوء خلقها ويمن المسكن سعته وحسن جوار أهله وشؤمه ضيقه وسوء جوار أهله ويمن الفرس ذله وحسن خلقه وشؤمه صعوبته).
        قال العراقي: رواه مسلم من حديث ابن عمر الشؤم في الدار والمرأة والفرس وفي رواية له إن يكن من الشؤم شيء حقاً وله من حديث سهل بن سعد إن كان ففي الفرس والمرأة والمسكن وللترمذي من حديث حكيم بن معاوية لا شؤم وقد يكون اليمن في الدار والمرأة والفرس ورواه ابن ماجه فسماه عمر بن معاوية وللطبراني من حديث أسماء بنت عميس قالت يا رسول الله ما سوء الدار قال ضيق ساحتها وخبث جيرانها قيل فما سوء الدابة قال منعها ظهرها وسوء خلقها قيل فما سوء المرأة قال عقم رحمها وسوء خلقها وكلاهما ضعيف

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.