ஹதீஸின் தரம்: விபரம் கீழே
கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும்; அதன் மீது உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அடிமையான நாஇம் (ரஹ்)
அப்துல்லாஹ் பின் அஹ்மத் அவர்கள் கூறுகிறார்:
எனது தந்தை (இமாம் அஹ்மத் அவர்கள்), இந்த செய்தியில் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறப்படவில்லை என்று கூறினார்.
(முஸ்னது அஹ்மத்: 26556)حَدَّثَنَا عَلِيُّ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ نَاعِمٍ، مَوْلَى أُمِّ سَلَمَةَ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُجَصَّصَ قَبْرٌ، أَنْ يُبْنَى عَلَيْهِ، أَوْ يُجْلَسَ عَلَيْهِ»
قَالَ أَبِي: لَيْسَ فِيهِ أُمُّ سَلَمَةَ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-26556.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-25957.
- இப்னு லஹீஆ வழியாக வரும் இந்த செய்தி முத்தஸிலாகவும், முர்ஸலாகவும் வந்துள்ளது. இவரிடமிருந்து ஆரம்பத்தில் செவியேற்ற அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள், இந்த செய்தியை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் இடம்பெறாமல் முர்ஸலாக அறிவித்துள்ளார் என்பதால் இதை முர்ஸல் என்றே கருதவேண்டும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-26555 .
சமீப விமர்சனங்கள்