தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-3235

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மழைஇல்லாத நிலையிலும் பயணத்தில் இல்லாத நிலையிலும் லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது மக்கள் அவர்களிடம் “அபுல் அப்பாஸ் அவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்தில் இவ்வாறு செய்தார்கள்?” என்று கேட்டனர். அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தம் சமுதாயத்தாருக்கு எளிதாக இருக்க நபி (ஸல்) அவர்கள் கருதினார்கள்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)

(முஸ்னது அஹ்மத்: 3235)

حَدَّثَنَا يَحْيَى، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، قَالَ: حَدَّثَنِي صَالِحٌ مَوْلَى التَّوْأَمَةِ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

«جَمَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ، وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ، وَالْعِشَاءِ فِي غَيْرِ مَطَرٍ وَلَا سَفَرٍ» قَالُوا: يَا أَبَا عَبَّاسٍ، مَا أَرَادَ بِذَلِكَ؟ قَالَ: التَّوَسُّعَ عَلَى أُمَّتِهِ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-3235.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-3109.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸாலிஹ் அவர்கள் பற்றி சிலர் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2 / 201 )

மேலும் பார்க்க : புகாரி-543 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.