ஒரு வியாபாரத்தை இரண்டு வியாபாரமாக (அதாவது உடனடி விற்பனைக்கு ஒரு விலையும், தவணை முறை விற்பனைக்கு வேறு ஒரு கூடுதலான விலையும் வைத்து வியாபாரம்) செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸிமாக் அவர்கள், “ஒரு வியாபாரத்தை இரண்டு வியாபாரமாக செய்வது” என்றால் என்ன என்பது பற்றி விளக்கமளிக்கையில், “ஒருவர் ஒரு பொருளை விற்கும் போது தவணைமுறையில் வாங்கினால் இன்ன விலையும்; உடனடி விலைக்கு வாங்கினால் இன்ன விலையும் என்று கூறி விற்பதாகும்” என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 3783)حَدَّثَنَا حَسَنٌ، وَأَبُو النَّضْرِ، وأَسْوَدُ بْنُ عَامِرٍ، قَالُوا: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ،، عَنْ أَبِيهِ، قَالَ:
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَفْقَتَيْنِ فِي صَفْقَةٍ وَاحِدَةٍ»
قَالَ أَسْوَدُ: قَالَ شَرِيكٌ: قَالَ سِمَاكٌ: ” الرَّجُلُ يَبِيعُ الْبَيْعَ، فَيَقُولُ: هُوَ بِنَسَاءٍ بِكَذَا وَكَذَا، وَهُوَ بِنَقْدٍ بِكَذَا وَكَذَا “
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-3783.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
ஸிமாக் பின் ஹர்ப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
இஸ்ராயீல், அபுல்அஹ்வஸ் ஆகியோர் இந்தச் செய்தியை இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர்.
ஷரீக் பின் அப்துல்லாஹ் மட்டுமே நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.
3 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ..அஹ்மத்-3783 ,
இப்னு குஸைமா-176 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-1701 .
சமீப விமர்சனங்கள்