தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-3949

---


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு மனிதர் குறித்து மதிப்பும், உயர்வும் மிக்க நம்முடைய இறைவன் வியப்படைகிறான். (அதில் முதலாமவர்:) தனது படுக்கை, போர்வை, மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் தொழுகைக்காக எழும் மனிதர். மேலும் இவரைப் பற்றி அவன், தனது வானவர்களிடம் கூறுகிறான்: “என்னுடைய வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள் ! படுக்கை, போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும் உதறி விட்டு அதிகாலையில் எழுந்து விட்டான். (எதற்காக?) என்னிடமிருந்து கிடைக்கும் அருள் மீது ஆசை வைத்து; என்னிடமிருந்து கிடைக்கும் தண்டனையைப் பயந்து (இவ்வாறு நடந்துக் கொள்கிறான்)

(அதில் இரண்டாவது மனிதர்:) அல்லாஹ்வின் பாதையில் போரிடும் மனிதர். தன் அணியினர் தோல்வியடையும் சமயம், தான் வெருண்டோடுவது பற்றியும் அதனால் தனக்கு உண்டாகும் பாதகத்தையும், (வெருண்டு ஓடாமல்) முன்னேறி செல்வதால் தனக்கு கிடைக்கும் நன்மை பற்றியும் அறிந்து முன்னேறி சென்று சண்டையில் இரத்தம் ஓட்டப்பட்டு கொல்லப்பட்டவர். மேலும் இவரைப் பற்றி அவன், தனது வானவர்களிடம் கூறுகிறான்: “என்னுடைய வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள் ! (போரில் வெருண்டோடாமல்) முன்னேறி செல்கிறான். (எதற்காக?) என்னிடமிருந்து கிடைக்கும் அருள் மீது ஆசை வைத்து; என்னிடமிருந்து கிடைக்கும் தண்டனையைப் பயந்து (இவ்வாறு) இரத்தம் ஓட்டப்பட்டு கொல்லப்படுகிறான்.

(முஸ்னது அஹ்மத்: 3949)

حَدَّثَنَا رَوْحٌ، وَعَفَّانُ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ عَفَّانُ: أَخْبَرَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنِ مُرَّةَ الْهَمْدَانِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

عَجِبَ رَبُّنَا عَزَّ وَجَلَّ مِنْ رَجُلَيْنِ: رَجُلٍ ثَارَ عَنْ وِطَائِهِ وَلِحَافِهِ، مِنْ بَيْنِ أَهْلِهِ وَحَيِّهِ إِلَى صَلَاتِهِ، فَيَقُولُ رَبُّنَا: أَيَا مَلَائِكَتِي، انْظُرُوا إِلَى عَبْدِي، ثَارَ مِنْ فِرَاشِهِ وَوِطَائِهِ، وَمِنْ بَيْنِ حَيِّهِ وَأَهْلِهِ إِلَى صَلَاتِهِ، رَغْبَةً فِيمَا عِنْدِي، وَشَفَقَةً مِمَّا عِنْدِي، وَرَجُلٍ غَزَا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَانْهَزَمُوا، فَعَلِمَ مَا عَلَيْهِ مِنَ الْفِرَارِ، وَمَا لَهُ فِي الرُّجُوعِ، فَرَجَعَ حَتَّى أُهْرِيقَ دَمُهُ، رَغْبَةً فِيمَا عِنْدِي، وَشَفَقَةً مِمَّا عِنْدِي، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِمَلَائِكَتِهِ: انْظُرُوا إِلَى عَبْدِي، رَجَعَ رَغْبَةً فِيمَا عِنْدِي، وَرَهْبَةً مِمَّا عِنْدِي، حَتَّى أُهَرِيقَ دَمُهُ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-3949.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-3819.




1 . இந்த செய்தியை அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸலமா அவர்கள், அதாஉ பின் ஸாயிப் —> முர்ரா அல்ஹம்தானீ —> இப்னு மஸ்வூத் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். (அஹ்மத்-3949)

அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் காலித் பின் அப்துல்லாஹ் அவர்கள், அதாஉ பின் ஸாயிப் —> முர்ரா அல்ஹம்தானீ —> இப்னு மஸ்வூத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார். (நூல்: அத்தஹஜ்ஜுத் வ கியாமுல்லைல்-249) 

2 . மேலும் கைஸ் பின் ரபீஉ என்பவர் அபூஇஸ்ஹாக் —> முர்ரா அல்ஹம்தானீ —> இப்னு மஸ்வூத் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். (நூல்: அல்இலலுல் வாரிதா-869) 

(கைஸ் பின் ரபீஉ அவரிடமிருந்து யஹ்யா அல்ஹிமானீ மட்டும் இவ்வாறு தனித்து அறிவித்துள்ளார். கைஸ் பலவீனமானவர் என்பதால் இதை பொருட்படுத்த தேவையில்லை)

3 . இஸ்ராயீல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் யூனுஸ்
அவர்கள் இஸ்ராயீல் —> அபூஇஸ்ஹாக் —> அபுல்அஹ்வஸ், அபுல்கனூத் —> இப்னு மஸ்வூத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.

இஸ்ராயீல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் ஆதம் அவர்கள் இஸ்ராயீல் —> அபூஇஸ்ஹாக் —> அபூஉபைதா, அபுல்கனூத் —> இப்னு மஸ்வூத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.

இவ்வாறு மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர்களை கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இந்த செய்தியை (அதிகமானவர்கள் நபித்தோழரின் சொல்லாக அறிவித்திருப்பதால்) இந்த செய்தியை நபித்தோழரின் சொல் என்று கூறுவதே பொருத்தமானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-869, 5/266)

நபித்தோழரின் சொல்லாக வந்துள்ள செய்திகளில் விமர்சனங்கள் இருப்பதாலும், அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து (அவர் மூளை குழம்புவதற்கு முன்) அவரிடமிருந்து செவியேற்றவர்களான ஹம்மாத் பின் ஸலமா, ஸாயிதா பின் குதாமா ஆகியோர் இந்த செய்தியை நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர் என்பதாலும் இது நபியின் சொல்லாக வந்திருப்பது சரியானதே என்று ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் கூறியுள்ளார்.

1 . காலித் பின் அப்துல்லாஹ் அவர்கள், அதாஉ பின் ஸாயிப் மூளை குழம்பிய பிறகே அவரிடமிருந்து ஹதீஸைக் கேட்டுள்ளார். ஹம்மாத் பின் ஸலமா அவர்கள், அதாஉ பின் ஸாயிப் மூளை குழம்புவதற்கு முன் அவரிடமிருந்து ஹதீஸைக் கேட்டுள்ளார்.

2 . ஹம்மாத் பின் ஸலமா அவர்களைப் போன்றே ஸாயிதா பின் குதாமாவும் அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். ஸாயிதா பின் குதாமா அவர்கள், அதாஉ பின் ஸாயிப் மூளை குழம்புவதற்கு முன் அவரிடமிருந்து ஹதீஸைக் கேட்டுள்ளார்.(மூளிஹு அவ்ஹாமில் ஜம்இ வத்தஃப்ரீக்-1703) என்றாலும் இதில் வரும் ஹஸன் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பலவீனமானவர்.

3 . அபுல்அஹ்வஸ் இந்த செய்தியை ஷரீக் பின் அப்துல்லாஹ் வழியாக அறிவித்துள்ளார் என்பதால் ஷரீக் பலவீனமானவர் என்பதால் அதைப்பொருட்படுத்த தேவையில்லை.

4 . அபூஉபைதா அவர்கள், தனது தந்தை இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை. எனவே மீதமிருப்பது இஸ்ராயீல் —> அபூஇஸ்ஹாக் —> அபுல்கனூத் —> இப்னு மஸ்வூத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடர் மட்டுமே.

  • எனவே நபியின் சொல்லாக வந்துள்ள செய்திக்கு எதிராக ஒரே ஒரு மவ்கூஃபான செய்தி இருப்பதாலும், மேலும் தரத்திலும் சமமாக இருப்பதாலும், பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற அடிப்படையில் முத்தஸிலாக வரும் செய்திக்கே முன்னுரிமை என்பதால் மேற்கண்ட அஹ்மத்-3949 எண்ணில் இடம்பெறும் ஹம்மாத் பின் ஸலமா —> அதாஉ பின் ஸாயிப் —> முர்ரா —> இப்னு மஸ்வூத் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.

1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

நபியின் சொல்லாக வந்துள்ள செய்திகள்:

  • அதாஉ பின் ஸாயிப் —> முர்ரா —> இப்னு மஸ்வூத் (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-19402 , அஹ்மத்-3949 , அபூதாவூத்-2536 , முஸ்னத் அபீ யஃலா-5272 , 5361 , 5362 , இப்னு ஹிப்பான்-2557 , 2558 , அல்முஃஜமுல் கபீர்-10383 , ஹாகிம்-2531 , குப்ரா பைஹகீ-17930 , 18524 ,

நபித்தோழரின் சொல்லாக வந்துள்ள செய்திகள்:

  • அபூஇஸ்ஹாக் —> அபூஉபைதா —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21202 , குப்ரா நஸாயீ-10637 , அல்முஃஜமுல் கபீர்-8798 ,

…இன்ஷா அல்லாஹ் மற்ற தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.

2 comments on Musnad-Ahmad-3949

  1. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக… மொழிபெயர்ப்பில் தொழுகைக்காக எழுவது என்ற வார்த்தை விடுபட்டுள்ளதாக நினைக்கிறேன்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. மொழிப்பெயர்ப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.