அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தரையில்) ஒரு கோட்டை வரைந்தார்கள். பிறகு, “இதுவே அல்லாஹ்வின் வழியாகும்” என்று கூறினார்கள்.
பின்னர் அதற்கு வலது புறத்திலும் இடது புறத்திலும் பல கோடுகளை வரைந்தார்கள். பிறகு, “இவை சிதறிக்கிடக்கும் (பல) வழிகள். இந்த ஒவ்வொரு வழியிலும் ஒரு சைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் (மக்களை) அழைக்கிறான்” என்று கூறிவிட்டு, பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்:
“இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.” (அல்குர்ஆன் 6:153)
(இவை, “சிதறிக்கிடக்கும் பல வழிகள்” என்ற வார்த்தைகளில் “சிதறிக்கிடக்கும்” என்று வார்த்தையை யஸீத் பின் ஹாரூன் அவர்கள் அறிவித்துள்ளார்.)
(முஸ்னது அஹ்மத்: 4142)حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَحَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ:
خَطَّ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطًّا ، ثُمَّ قَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ» ، ثُمَّ خَطَّ خُطُوطًا عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ، ثُمَّ قَالَ: ” هَذِهِ سُبُلٌ – قَالَ يَزِيدُ: مُتَفَرِّقَةٌ – عَلَى كُلِّ سَبِيلٍ مِنْهَا شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ “، ثُمَّ قَرَأَ: (وَإِنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ، فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ)
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-3928.
Musnad-Ahmad-Shamila-4142.
Musnad-Ahmad-Alamiah-3928.
Musnad-Ahmad-JawamiulKalim-3997.
இந்தச் செய்தியின் 2 அறிவிப்பாளர்தொடர்களின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்
2 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ-அல்அன்பரீ, 3 . யஸீத் பின் ஹாரூன்.
4 . ஹம்மாத் பின் ஸைத்-அபூஇஸ்மாயீல்
5 . ஆஸிம் பின் பஹ்தலா-ஆஸிம் பின் அபுன் நஜூத்
6 . ஷகீக் பின் ஸலமா-அபூவாஇல்
7 . அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)-இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20386-ஆஸிம் பின் பஹ்தலா-ஆஸிம் பின் அபுன் நஜூத் அவர்கள் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதால் இது ஹஸன் தர அறிவிப்பாளர்தொடராகும். வேறு பலமான அறிவிப்பாளர்தொடரிலும் இந்தச் செய்தி வந்திருப்பதால் இது பலமான செய்தியாகும்.
பார்க்க: ராவிபெயர்-ஆஸிம் பின் பஹ்தலா.
மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1865.
சமீப விமர்சனங்கள்