ஒரு இடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தமது இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு வாகனத்தைத் திருப்பினார்கள். உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன்.
அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 4535)حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ نَافِعٍ، مَوْلَى ابْنِ عُمَرَ،
أَنَّ ابْنَ عُمَرَ: «سَمِعَ صَوْتَ، زَمَّارَةِ رَاعٍ فَوَضَعَ أُصْبُعَيْهِ فِي أُذُنَيْهِ، وَعَدَلَ رَاحِلَتَهُ عَنِ الطَّرِيقِ» ، وَهُوَ يَقُولُ: يَا نَافِعُ أَتَسْمَعُ؟، فَأَقُولُ: نَعَمْ، فَيَمْضِي حَتَّى، قُلْتُ: لَا فَوَضَعَ يَدَيْهِ، وَأَعَادَ رَاحِلَتَهُ إِلَى الطَّرِيقِ، وَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَمِعَ صَوْتَ زَمَّارَةِ رَاعٍ فَصَنَعَ مِثْلَ هَذَا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-4307.
Musnad-Ahmad-Shamila-4535.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-4397.
- இதன் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரம் என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
கூறியுள்ளார்…
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-4535 , 4965 , இப்னு மாஜா-1901 , அபூதாவூத்-4924 , 4925 , இப்னு ஹிப்பான்-693 , அல்அவ்ஸத்-1173 , 6767 , குப்ரா பைஹகீ-20997 , 20998 , 20999 , …
அஸ்ஸலாமு அலைக்கும்
ஒருமுறை நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களிடம் ஒருவர் வந்து (திருமணத்தில்) இசைப்பதையும், கேளிக்கை நடத்துவதையும் அனுமதித்துள்ளீர்களா? என வினவினார். அதற்கு, ‘ஆம்! அது திருமணம்தானே! விபச்சாரமல்லவே!’ என நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் ஸாயிப் பின் யஸீத் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: தப்ரானி, பத்ஹுல் பாரி, பாகம் 11, பக்கம் 133
இந்த செய்தியின் தரம் குறித்து விளக்கவும்.
வ அலைக்கும் ஸலாம்.
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-6666 .
ஜசாகல்லாஹ்