தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-51

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), “நான் காலையிலும், மாலையிலும், (இரவில்) எனது படுக்கையிலும் ஓதுவதற்கேற்ற (பிரார்த்தனை) ஒன்றை எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்)அவர்கள், “அல்லாஹும்ம பா[F](த்)திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, ஆலிமல் ஃகைபி(B] வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப(B] குல்லி ஷையிவ் வமலீ(க்)கஹூ, அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(B(க்)க மின் ஷர்ரி நப்[F]ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹீ என்று கூறுங்கள்” என்றார்கள்.

(பொருள்: இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்)

(முஸ்னது அஹ்மத்: 51)

حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا شُعْبَةُ، أخبرني يَعْلَى بْنُ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ عَاصِمٍ، يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ أَبُو بَكْرٍ:

يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَقُولُهُ إِذَا أَصْبَحْتُ، وَإِذَا أَمْسَيْتُ، وَإِذَا أَخَذْتُ مَضْجَعِي. قَالَ: ” قُلْ: اللَّهُمَّ فَاطِرَ السَّمَاواتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَوْ قَالَ اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ


Musnad-Ahmad-Tamil-49.
Musnad-Ahmad-TamilMisc-49.
Musnad-Ahmad-Shamila-51.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-49.




1 . இந்தக் கருத்தில் அபூபக்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • யஃலா பின் அதாஃ —> அம்ர் பின் ஆஸிம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) —> அபூபக்ர் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2705 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26523 , 29274 , அஹ்மத்-7961 , தாரிமீ-2731 , அல்அதபுல் முஃப்ரத்-12021203 , அபூதாவூத்-5067 , திர்மிதீ-3392 , முஸ்னத் பஸ்ஸார்-9666 , 9667 , குப்ரா நஸாயீ-7644 , 7652 , 7668 , 9755 , 10326 , 10563 , முஸ்னத் அபீ யஃலா-77 , இப்னு ஹிப்பான்-962 , ஹாகிம்-1892 ,

  • ஷுஃபா…—> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) —> அபூபக்ர் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-9 , அஹ்மத்-51 , 5263 ,

  • ஒரு மனிதர் —> அம்ர் பின் அபூஸுஃப்யான் —> அபூபக்ர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20742 ,

  • லைஸ் —> முஜாஹித் —> அபூபக்ர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-81 ,

2 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3529 .

3 . அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-5083 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.