தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3529

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூராஷித் அல்ஹுபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றவற்றிலிருந்து எங்களுக்கு சில செய்திகளைத் தெரிவியுங்கள்’ என்று கூறினேன். அப்போதவர்கள், என்னை நோக்கி கடிதம் ஒன்றைப் போட்டார்கள். மேலும், ‘இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு (மற்றவர்கள் மூலம்) எழுதி(யனுப்பி)ய கடிதமாகும் என்று கூறினார்கள். அப்போது அதை நான் பார்த்தேன். அதில் இடம்பெற்றிருந்து செய்தி பின்வருமாறு இருந்தது:

அபூபக்ர் (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே!, ‘நான் காலையிலும், மாலையிலும், ஓதுவதற்கேற்ற (பிரார்த்தனை) ஒன்றை எனக்குக் கற்றுத்தாருங்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்)அவர்கள், “அல்லாஹும்ம ஃபா(த்)திரஸ் ஸமாவாத்தி வல்அர்ழி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாத(த்)தி, லாயிலாஹ இல்லா அன்(த்)த, ரப்ப குல்லி ஷையிவ் வமலீ(க்)கஹூ, அவூது பி(க்)க மின் ஷர்ரி நஃப்ஸீ, வமின் ஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹீ, வ அன் அக்தரிஃப அலா நஃப்ஸீ ஸூஅன், அவ் அஜுர்ரஹூ இலா முஸ்லிம் என்று ஓதுங்கள்” என்று கூறினார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அவற்றின் உரிமையாளனே!. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும், ஷைத்தானின் தீங்கு மற்றும் அவனுடைய இணைவைப்பை விட்டும், எனக்கு நானே தீமை செய்வதை விட்டும், அல்லது ஒரு முஸ்லிமுக்கு தீமை செய்வதை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது, ஹஸன் கஃரீப் தரத்தில் அமைந்த அறிவிப்பாளர்தொடராகும்.

(திர்மிதி: 3529)

بَابٌ

حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَرَفَةَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي رَاشِدٍ الحُبْرَانِيِّ، قَالَ:

أَتَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ العَاصِ، فَقُلْتُ لَهُ: حَدِّثْنَا مِمَّا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَلْقَى إِلَيَّ صَحِيفَةً، فَقَالَ: هَذَا مَا كَتَبَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَنَظَرْتُ فِيهَا فَإِذَا فِيهَا: إِنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ قَالَ: يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي مَا أَقُولُ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ، فَقَالَ: ” يَا أَبَا بَكْرٍ قُلْ: اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ عَالِمَ الغَيْبِ وَالشَّهَادَةِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ، وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ

هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3529.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3476.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் ராவீ-7845-இஸ்மாயீல் பின் அய்யாஷ் ஷாம் வாசிகள் வழியாக அறிவித்தால் மட்டுமே சரியானதாகும் என்று அதிகமான அறிஞர்கள் கூறியிருப்பதாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/142)

இவரின் ஆசிரியர் முஹம்மது பின் ஸியாத் அவர்கள், ஷாம் நாட்டைச் சேர்ந்த ஹிம்ஸ் நகரைச் சேர்ந்தவர் என்பதால் இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.

2. இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இஸ்மாயீல் பின் அய்யாஷ் —> முஹம்மது பின் ஸியாத் —> அபூராஷித் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-6851 , அல்அதபுல் முஃப்ரத்-1204 , திர்மிதீ-3529 ,

  • அப்துல்லாஹ் பின் யஸீத் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-6597 , அல்முஃஜமுல் கபீர்-52 , 94 ,

மேலும் பார்க்க: அஹ்மத்-51 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.