தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-728

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஏழு துணிகளால் கஃபன் செய்யப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ (ரஹ்)

(முஸ்னது அஹ்மத்: 728)

حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ أَبِيهِ، قَالَ:

«كُفِّنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَبْعَةِ أَثْوَابٍ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-728.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-710.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25811-அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அகீல் அவர்கள் நல்ல மனிதர்; சிறப்புக்குரியவர் தான் என்றாலும் ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர், இவர் சுமாரனவர் என்றும்; சிலர் பலவீனமானவர் என்றும்; சிலர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும்; சிலர் இவர் மற்ற பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கும் செய்திகளை ஏற்கக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.

  • இப்னு உயைனா அவர்கள், குறைஷிகளில் நான்கு பேரின் ஹதீஸ்களை விட்டுவிடவேண்டும் என்று கூறிவிட்டு அவர்களில் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அகீல் ஒருவர் என்று கூறினார்.  இவரின் நினைவாற்றல் சரியில்லை என்று இப்னு உயைனா அவர்கள் கூறியதாக அபூமஃமர், ஹுமைதீ ஆகியோர் அறிவித்துள்ளனர்.
  • இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அவர்கள், இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்.
  • இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    திர்மிதீ, ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    ஆகியோர் சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
  • யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
    இறப்பு ஹிஜ்ரி 262
    வயது: 80
    அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் இவரின் செய்தியில் அதிகம் பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல. இவரின் ஹதீஸ்களை (தனி) ஆதாரமாக ஏற்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
  • அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர், என்றாலும் இவரின் ஹதீஸில் பலவீனம் உள்ளது என்று தக்ரீபில் கூறியுள்ளார். இவர் நினைவாற்றல் சரியில்லாதவர்; இவரின் செய்திகளை மற்றவர்களின் செய்தியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இவர் பிறருக்கு மாற்றமாக அறிவித்தால் ஏற்கக்கூடாது. மாற்றமில்லாமல் அறிவிக்கும் செய்திகள் ஹஸன் தரம் என்று தனது தல்கீஸில் கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/424, தக்ரீபுத் தஹ்தீப்-1/542…)


மேற்கண்ட அறிஞர்களின் விமர்சனத்திலிருந்து, இவர் மற்றவர்களைப் போன்று அறிவிக்கும் செய்திகளை ஏற்கலாம்; மற்றவர்களுக்கு மாற்றமில்லாமல் அறிவிக்கும் செய்திகளை சில நிபந்தனையின்படி ஏற்கலாம்; அவை ஹஸன் தரம் என்றும், மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கும் செய்திகளை ஏற்கக்கூடாது என்றும் முடிவு செய்யலாம்.

இந்தச் செய்தியை மற்ற பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்பதால் இது பலவீனமான செய்தியாகும்.


3 . இந்தக் கருத்தில் அலீ பின் அபூதாலிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11084 , அஹ்மத்-728 , 801 ,  முஸ்னத் பஸ்ஸார்-646 ,


சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-1264 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.