அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதைக் கவனிக்கட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஸுஹைர் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, முஅம்மல் பின் இஸ்மாயீல் ஆகியோரில், முஅம்மல் அவர்கள், ஸுஹைர் பின் முஹம்மத் அவர்களின் பெயருடன் அல்குராஸானீ என்று கூறியுள்ளார். மேலும் مَنْ يُخَالِلُ – “தாம் யாருடன் நட்பு கொள்கிறோம்” என்ற வார்த்தையை அறிவித்துள்ளார்.
(அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள், مَنْ يُخَالِطُ – தாம் யாருடன் வாழ்கிறார்-பழகுகிறார் என்ற வார்த்தையை அறிவித்துள்ளார்)
(முஸ்னது அஹ்மத்: 8028)حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، وَمُؤَمَّلٌ، قَالَا: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ – قَالَ مُؤَمَّلٌ: الْخُرَاسَانِيُّ -، حَدَّثَنَا مُوسَى بْنُ وَرْدَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْمَرْءُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِطُ»
وَقَالَ مُؤَمَّلٌ: «مَنْ يُخَالِلُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8028.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7829.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் ஸுஹைர் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். முஅம்மல் பின் இஸ்மாயீல் ஆகியோரில், ராவீ-34823-முஅம்மல் பின் இஸ்மாயீல் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றலில் குறையுள்ளவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். என்றாலும் இந்த செய்தியை ஸுஹைர் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.போன்ற பலரும் அறிவித்துள்ளனர் என்பதால் இது சரியானதாகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-4833 .
சமீப விமர்சனங்கள்