தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-8361

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள் மற்றும், வியாழக்கிழமைகளில் அதிகமாக நோன்பு வைப்பார்கள். இதுப்பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும்  (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அல்லது ஒவ்வொரு முஃமினுக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்; தமக்கிடையே பகைமை உள்ள இரு மனிதர்களைத் தவிர!

(இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும்வரை) இவர்களுக்கு (மன்னிப்பை)  தாமதப்படுத்துங்கள் என்று அல்லாஹ் (வானவர்களிடம்)  கூறுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 8361)

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رِفَاعَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَكْثَرَ مَا يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ، فَقِيلَ لَهُ، فَقَالَ: ” إِنَّ الْأَعْمَالَ تُعْرَضُ كُلَّ اثْنَيْنِ وَخَمِيسٍ – أَوْ: كُلَّ يَوْمِ اثْنَيْنِ وَخَمِيسٍ – فَيَغْفِرُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِكُلِّ مُسْلِمٍ – أَوْ: لِكُلِّ مُؤْمِنٍ – إِلَّا الْمُتَهَاجِرَيْنِ، فَيَقُولُ: أَخِّرْهُمَا


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8361.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8162.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி முஹம்மது பின் ரிஃபாஆ பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். மேலும் இவரிடமிருந்து அபூஆஸிம் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் இவர் அறியப்படாதவர் என்று கருதப்படுவார்.
  • அபுல்ஃபத்ஹ் அல்அஸ்தீ அவர்கள், இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார். (இவரே விமர்சிக்கப்பட்டவர் தான் என்றாலும் மற்றவர்களின் விமர்சனம் இல்லாத போது இவரின் கருத்தை ஏற்கலாம் என சிலர் கூறியுள்ளனர்). இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/562, தக்ரீபுத் தஹ்தீப்-1/844)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-747 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.