பாடம்: 138
பிரார்த்தனையின் ஒழுங்குகள்.
அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) கூறியதாவது:
நான் பிரார்த்தனை செய்யும் போது இரு கைகளின், இரு விரல்களால் சைக்கினை செய்ததை கண்ட அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (ஒரு விரலால் மட்டுமே சைக்கினை செய்ய வேண்டும் என்று கூறி) இரு விரல்களால் சைக்கினை செய்வதை தடுத்தார்கள்.
(முஅத்தா மாலிக்: 577)
138- بَابُ الْعَمَلِ فِي الدُّعَاءِ
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، قَالَ
رَآنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ «وَأَنَا أَدْعُو وَأُشِيرُ بِأُصْبُعَيْنِ، أُصْبُعٍ مِنْ كُلِّ يَدٍ فَنَهَانِي»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-577.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-501.
- இந்த ஹதீஸ் பற்றி திர்மிதீ அவர்கள், தொழுகையின் அத்தஹிய்யாத் இருப்பில் துஆ ஓதும் போது ஒரு விரலால் மட்டுமே இஷாரா செய்ய வேண்டும் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து என்று கூறியுள்ளார்.
(பார்க்க: திர்மிதீ-3557)
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக (மவ்கூஃபாக) வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-577 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3241 , அல்முஃஜமுல் கபீர்-13057 ,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-3557 .
3 . ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-1499 .
4 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-12901 .
…
Tharam ,moliperpu marrum reference no add seiyavilai
ஸலாம். கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.