இரவில் நின்று தொழ வேண்டும் என்று எண்ணிப் படுக்கைக்கு ஒருவர் வந்து காலை பஜ்ர் வரை அவர் கண் மிகைத்து தூங்கி விட்டால் அவருக்கு அவர் எண்ணிய கூலி உண்டு. அவரது தூக்கம் அவருக்கு தன் இறைவன் மூலம் கிடைத்த தர்மமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)
(நஸாயி: 1787)بَابُ مَنْ أَتَى فِرَاشَهُ وَهُوَ يَنْوِي الْقِيَامَ فَنَامَ
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«مَنْ أَتَى فِرَاشَهُ وَهُوَ يَنْوِي أَنْ يَقُومَ يُصَلِّي مِنَ اللَّيْلِ فَغَلَبَتْهُ عَيْنَاهُ حَتَّى أَصْبَحَ كُتِبَ لَهُ مَا نَوَى وَكَانَ نَوْمُهُ صَدَقَةً عَلَيْهِ مِنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ»،
خَالَفَهُ سُفْيَانُ.
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1787.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.
2 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி), அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1344 , நஸாயீ-1787 , 1788 , இப்னு ஹிப்பான்-2588 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-1314 .
அஸ்ஸலாமு அலைக்கும், இந்த ஹதீஸின் தரம் தேவை சகோதரரே.
அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:
“படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான்.
வானவர்களிடம் கேட்கின்றான்:“வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்..!
படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..?என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..?
எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனதுதண்டனையைப் பயந்தா…?”
பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்:“உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.”
நூல்;-(அஹ்மத்)
அஸ்ஸலாமு அலைக்கும்.
பார்க்க: அஹ்மத்-3949 .