தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1817

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுது வருபவரை, நரகம் தீண்டாது.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

அபூஅப்துர்ரஹ்மான்-நஸாயீ இமாம் கூறுகிறார்:

இந்த அறிவிப்பாளர்தொடர் தவறாகும். ஸயீத் பின் அப்துல்அஸீஸ் அவர்களிடமிருந்து மர்வான் அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடரே உண்மையானதாகும்.

(பார்க்க: நஸாயீ-1814 , 1815)

(நஸாயி: 1817)

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الشُّعَيْثِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعًا بَعْدَهَا لَمْ تَمَسَّهُ النَّارُ»،

قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا خَطَأٌ، وَالصَّوَابُ حَدِيثُ مَرْوَانَ مِنْ حَدِيثِ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1817.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1804.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அப்துல்லாஹ் பின் முஹாஜிர் என்பவரிடமிருந்து இவரின் மகன் முஹம்மது பின் அப்துல்லாஹ் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார். மேலும் இவர் இந்த ஒரு செய்தியை மட்டுமே அறிவித்துள்ளார். இவரைப் பற்றிய தகவலை பதிவு செய்த புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    ஆகியோர் இவரின் குறை, நிறைகளைக் கூறவில்லை.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியிருப்பதுடன் இவரிடமிருந்து இவரின் மகன் அறிவிக்கும் செய்தியைத் தவிர மற்றவை கவனிக்க தக்கதாகும் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/439, தக்ரீபுத் தஹ்தீப்-1/550)

எனவே இவர் அறியப்படாதவர் என்ற வகையிலும், இவரின் மகன் வழியாக இந்த செய்தி வந்திருப்பதாலும் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-26764 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.