தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-2116

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

ஹுஸைன் பின் ஹாரிஸ் அல்ஜதலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் கத்தாப் (ரஹ்) அவர்கள் (பிறை தேடும்) சந்தேகத்திற்குரிய நாளில் மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுடன் அமர்ந்து அவர்களிடம் கேள்விகள் கேட்டேன். அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பிறையைக் கண்டதும் நோன்பு வையுங்கள். பிறையைக் கண்டதும் நோன்பை விடுங்கள். அதனடிப்படையில் குர்பானி வணக்கத்தை நிறைவேற்றுங்கள்.

உங்களுக்கு மேகம் மறைத்தால், முப்பது நாட்களாக (மாதத்தை) முழுமையாக்குங்கள்.

இரண்டு சாட்சிகள் சாட்சி கூறினால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்.

(நஸாயி: 2116)

أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ شَبِيبٍ أَبُو عُثْمَانَ، وَكَانَ شَيْخًا صَالِحًا بِطَرَسُوسَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ حُسَيْنِ بْنِ الْحَارِثِ الْجَدَلِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ،

أَنَّهُ خَطَبَ النَّاسَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ، فَقَالَ: أَلَا إِنِّي جَالَسْتُ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَاءَلْتُهُمْ، وَإِنَّهُمْ حَدَّثُونِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، وَانْسُكُوا لَهَا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا ثَلَاثِينَ، فَإِنْ شَهِدَ شَاهِدَانِ فَصُومُوا، وَأَفْطِرُوا»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-2116.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


1 . இந்தக் கருத்தில் பெயர் கூறப்படாத நபித்தோழர்கள் வழியாக வரும் செய்திகள்:

  • ஹுஸைன் பின் ஹாரிஸ் —> அப்துர்ரஹ்மான் பின் ஸைத் —> பெயர் கூறப்படாத நபித்தோழர்கள்

பார்க்க: அஹ்மத்-18895, குப்ரா நஸாயீ-2437, நஸாயீ-2116, தாரகுத்னீ-2193,



இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-1909,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.