பாடம்:
இறையில்லமான கஅபாவைச் சுற்றி (தவாஃப் செய்து) வரும்போது பேசுவதற்கு அனுமதி.
“(இறையில்லமான) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவது தொழுகையாகும். எனவே (அப்போது) பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த ஒருவர் கூறினார்.
அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)
நஸாயீ இமாம் கூறுகிறார்:
மேற்கண்ட செய்தியின் வாசக அமைப்பு யூஸுஃப் பின் ஸயீத் அவர்கள் அறிவித்தவையாகும். என்றாலும் ஹன்ளலா பின் அபூஸுஃப்யான் இதற்கு மாற்றமாக வேறு அமைப்பில் அறிவித்துள்ளார்.
(நஸாயி: 2922)إِبَاحَةُ الْكَلَامِ فِي الطَّوَافِ
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، ح وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنْ رَجُلٍ، أَدْرَكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الطَّوَافُ بِالْبَيْتِ صَلَاةٌ، فَأَقِلُّوا مِنَ الْكَلَامِ»
اللَّفْظُ لِيُوسُفَ خَالَفَهُ حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-2922.
Nasaayi-Alamiah-2873.
Nasaayi-JawamiulKalim-2889.
சமீப விமர்சனங்கள்