அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகில் (உள்ள பொருட்களில்) பெண்களும், வாசனை திரவியங்களும் எனக்கு பிரியமாக்கப்பட்டுள்ளது. எனது கண் குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(நஸாயி: 3939)أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى الْقُوْمَسِيُّ قَالَ: حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا سَلَّامٌ أَبُو الْمُنْذِرِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«حُبِّبَ إِلَيَّ مِنَ الدُّنْيَا النِّسَاءُ وَالطِّيبُ، وَجُعِلَ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-3879.
Nasaayi-Shamila-3939.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3903.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17852-ஸல்லாம் அபுல் முன்திர் (ஸல்லாம் பின் ஸுலைமான் அபுல் முன்திர்-அல்பஸரீ, அல்கூஃபீ) என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். ஸாஜீ , இப்னு அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
போன்றோர் சுமாரானவர் எனக் கூறியுள்ளனர்.
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார். ஸல்லாம் அத்தவீல் என்பவர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளார். உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் இவர் தனித்து அறிவிப்பவர் என்றும் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/139, அஸ்ஸிகாத்-இப்னு ஹிப்பான்-8364)
- ஸல்லாம் அபுல் முன்திர் என்ற பெயரில் இருவர் உள்ளனர்.
1. ஸல்லாம் பின் ஸுலைமான் அபுல்முன்திர் அல்முஸனீ (இவர் நடுத்தரமானவர்).
2 . ஸல்லாம் பின் அபுஸ்ஸஹ்பா-அல்பஸரீ. ( இவர் பலவீனமானவர்).
இந்த இருவரையும் இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் ஒருவராக கணக்கிட்டுவிட்டார். காரணம் இருவரின் புனைப் பெயரும் அபுல் முன்திர்; இருவரும் பஸராவில் வாழ்ந்தவர்கள்; இருவரும் ஸாபித் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர். ஸல்லாம் பின் அபுஸ்ஸஹ்பாவை பற்றி கூறும் போது ஸல்லாம் பின் ஸுலைமான் அவர்களின் மேற்கண்ட ஹதீஸை கூறிவிட்டார் என அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-657)
ஆனால் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இந்த செய்தியை ஸாபித் அவர்களிடமிருந்து இருவருமே அறிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-2385)
- மேற்கண்ட செய்தியை தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் பலமான அறிவிப்பாளர்தொடர் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் ஹஸன் தரம் என்றும் கூறியுள்ளனர்.
(நூல்: மீஸானுல் இஃதிதால்-3345-2/177, அத்தல்கீஸுல் ஹபீர்-1530, ஃபத்ஹுல் பாரீ-புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
ஹதீஸ் எண்1130 விளக்கம்)
- என்றாலும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இந்த கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகளில் ஸாபித் அவர்கள் நபித்தோழரைக் குறிப்பிடாமல் முர்ஸலாக அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடர்கள் மிக பலமாக இருப்பதால் முர்ஸல் என்பதே உண்மை என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-2385)
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸாபித் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-12293 , 12294 , 13057 , 14037 , முஸ்னத் பஸ்ஸார்-6878 , 6879 , குப்ரா நஸாயீ-8836 , 8837 , நஸாயீ-3939 , 3940 , முஸ்னத் அபீ யஃலா-3482 , 3530 , அல்முஃஜமுல் அவ்ஸத்-5203 , ஹாகிம்-2676 , குப்ரா பைஹகீ-13454 ,
- ஹிக்ல் பின் ஸியாத் —> அவ்ஸாயீ —> இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5772 , அல்முஃஜமுஸ் ஸகீர்-741 ,
2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-24440 .
3 . முகீரா பின் ஷுஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-1012 .
4 . முஃதமிர் பின் ஸுலைமான் —> ஸுலைமான் பின் தர்கான், லைஸ் பின் அபூஸுலைம் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7939 .
சமீப விமர்சனங்கள்