தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4050

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

4050. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடிமை (தன் எசமானர்களிடமிருந்து) ஓடிப் போய்விட்டால் அவனுடைய எந்தத் தொழுகையும் ஏற்றுக் கொள்ளப்படாது. (தொழுகையின் நன்மை கிடைக்காது.) அவன் அந்த நிலையில் மரணித்தால் இறைமறுப்பாளனாகவே மரணிப்பான்.

அறிவிப்பவர் : (ரலி)

 

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் ஒரு அடிமை ஓடிவிட்டான். அவர்கள் அவனைப் பிடித்து அவனின் கழுத்தைத் துண்டித்துவிட்டார்கள்.

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

جرير بن عبد الله البجلي

இறப்பு: ஹிஜ்ரி 51, கூஃபா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் பின் ஜாபிர்

தந்தை பெயர்: அப்துல்லாஹ் பின் ஜாபிர்

வம்சம்: பஜலீ, கஸ்ரீ

புனைப்பெயர்: அபூ அம்ர், அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: ஹிஜாஸ்

பயணித்த ஊர்கள்: மதீனா, கூஃபா, கர்கீஸியா

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 51, கூஃபா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

ஜரீர் பின் அப்துல்லாஹ் ரலி ஒரு நபித்தோழர் ஆவார். அவர் ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் இஸ்லாத்தைத் தழுவினார். அவர் கூஃபாவில் வசித்து வந்தார், பின்னர் உஸ்மான் ரலி அவர்களை ஏசும் ஊரில் இருக்க விரும்பாததால் கர்கீஸியாவுக்குச் சென்றார்.

அவர் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அழகுடன் ஒப்பிடப்பட்டவர். அவர் ஹிஜ்ரி 51 ஆம் ஆண்டு கூஃபாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி), முஆவியா பின் அபூஸுஃப்யான்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அல்முன்திர் பின் ஜரீர், உபைதுல்லாஹ் பின் ஜரீர், அய்யூப் பின் ஜரீர், இப்ராஹீம் பின் ஜரீர், அபூ ஸுர்ஆ பின் அம்ர், அனஸ் பின் மாலிக், ஷகீக் பின் ஸலமா அல்அஸதீ, ஸைத் பின் வஹ்ப அல்ஜுஹனீ, ஸியாத் பின் அலாகா, ஆமிர் அஷ்ஷஅபீ, கைஸ் பின் அபூஹாஸிம், ஹம்மாம் பின் அல்ஹாரிஸ்

வேறு பெயர்கள்: ஜரீர் அல்பஜலீ, ஜரீர்


ஆதாரம்: muslimscholars.info (4057) · Should verify


أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مُغِيرَةَ، عَنْ الشَّعْبِيِّ قَالَ: كَانَ جَرِيرٌ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

إِذَا أَبَقَ الْعَبْدُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ، وَإِنْ مَاتَ مَاتَ كَافِرًا،

وَأَبَقَ غُلَامٌ لِجَرِيرٍ فَأَخَذَهُ فَضَرَبَ عُنُقَهُ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4050.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4006.



மேலும் பார்க்க : நஸாயீ-4049 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.