தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4224

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மிக்னஃப் பின் ஸுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள், “மக்களே! ஒவ்வோர் ஆண்டும் உள்ஹிய்யாவும், ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில் பிராணிகளை அறுத்துப் பலியிடுவதும் ஒவ்வொரு குடும்பத்தார் மீதும் கடமையாகும்” என்று கூறினார்கள்.

முஆத் பின் முஆத் பின் நஸ்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அவ்ன் (ரஹ்) அவர்கள், (ரஜப் மாதத்தில்) பிராணிகளை அறுத்துப் பலியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இவ்வாறு ரஜப் மாதத்தில் செய்ததை என் கண் பார்த்துள்ளது.

(நஸாயி: 4224)

أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ قَالَ: حَدَّثَنَا مُعَاذٌ وَهُوَ ابْنُ مُعَاذٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ قَالَ: حَدَّثَنَا أَبُو رَمْلَةَ قَالَ: أَنْبَأَنَا مِخْنَفُ بْنُ سُلَيْمٍ قَالَ:

بَيْنَا نَحْنُ وُقُوفٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ عَلَى أَهْلِ بَيْتٍ فِي كُلِّ عَامٍ أَضْحَاةً، وَعَتِيرَةً»

قَالَ مُعَاذٌ: «كَانَ ابْنُ عَوْنٍ يَعْتِرُ أَبْصَرَتْهُ عَيْنِي فِي رَجَبٍ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4224.
Nasaayi-Alamiah-4152.
Nasaayi-JawamiulKalim-4176.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


  • அதீரா-ரஜப் மாதம் அறுத்துப் பலியிடுவது குறித்து வந்துள்ள செய்திகள்:
  • ஃபரஃ-ஆடு, ஒட்டகம் போன்றவற்றின் முதல் குட்டியை அறுத்துப் பலியிடுவது குறித்து வந்துள்ள செய்திகள்:
  • இவை மாற்றப்பட்ட சட்டங்கள் என்ற செய்திகள்:
  • இவை மாற்றப்படவில்லை என்ற கருத்துப் பற்றிய செய்திகள்:
  • ஃபரஃ, அதீரா பற்றி இருவகையான விளக்கம்:

1 . இந்தக் கருத்தில் மிக்னஃப் பின் ஸுலைம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இப்னு அவ்ன் —> அபூரம்லா —> மிக்னஃப் பின் ஸுலைம் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, இப்னு மாஜா-3125, அபூதாவூத்-2788, திர்மிதீ-1518, குப்ரா நஸாயீ-, நஸாயீ-4224,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-5473,

3 comments on Nasaayi-4224

  1. இந்த ஹதீஸின் தரம் என்ன❓

    📌தாரீகு பக்தாத்:

    من صام يومًا في سبيلِ اللهِ خفَّف عنه من وقوفِ يومِ القيامةِ عشرين سنةً

    சௌகானீ,இப்னு ஜவ்ஸீ இந்த ஹதீஸை موضوع என்று சொல்கிறார்கள்.

  2. இந்த ஹதீஸின் தரம் என்ன❓

    📌தாரீகு பக்தாத்:: 2/618

    من صام يومًا في سبيلِ اللهِ خفَّف عنه من وقوفِ يومِ القيامةِ عشرين سنةً

    சௌகானீ,இப்னு ஜவ்ஸீ இந்த ஹதீஸை موضوع என்று சொல்கிறார்கள்.

  3. இந்த ஹதீஸின் தரம் என்ன❓

    📌 இப்னு அபீ ஷைபா:

    ٢٥٨٨٧ – حدثنا أبو بكر قال: حدثنا معاذ عن ابن عون عن محمد قال: كان يذبح في كل رجب.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.