பாடம்:
தீய அண்டை வீட்டாரை விட்டுப் பாதுகாப்புத் தேடுதல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிலையான வசிப்பிடத்தில் உள்ள தீய அண்டை வீட்டாரை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். ஏனெனில், (பயணம் செய்து வந்துள்ள) கிராமப்புறத்து அண்டை வீட்டாரோ உங்களை விட்டு (இடம் பெயர்ந்து) சென்றுவிடுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(நஸாயி: 5502)الِاسْتِعَاذَةُ مِنْ جَارِ السُّوءِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«تَعَوَّذُوا بِاللَّهِ، مِنْ جَارِ السَّوْءِ فِي دَارِ الْمُقَامِ، فَإِنَّ جَارَ الْبَادِيَةِ يَتَحَوَّلُ عَنْكَ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-5407.
Nasaayi-Shamila-5502.
Nasaayi-Alamiah-5407.
Nasaayi-JawamiulKalim-5435.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஷுஐப்
2 . அம்ர் பின் அலீ-அல்ஃபல்லாஸ்
3 . யஹ்யா பின் ஸயீத்-அல்கத்தான்
4 . இப்னு அஜ்லான்-முஹம்மத் பின் அஜ்லான்
5 . ஸயீத் பின் கைஸான்-ஸயீத் பின் அபூஸயீத் அல்மக்புரீ
6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் (ரலி)
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: … அஹ்மத்-8553, நஸாயீ-5502, …
இப்னு அஜ்லான் வழியாக கூடுதலாக வாக்கிய அமைப்பில் வந்துள்ள செய்திகள்:
- அஸ்ஸுஹ்த்-ஹன்னாத் பின் ஸரீ-2/505.
الزهد لهناد بن السري (2/ 505):
حَدَّثَنَا أَبُو خَالِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ قَالَ: كَانَ مِنْ دُعَاءِ دَاوُدَ النَّبِيِّ صلى الله عليه وسلم: «اللَّهُمَّ ، إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ ، وَمِنْ زَوْجٍ تُشَيِّبُنِي قَبْلَ الْمَشِيبِ، وَمِنْ وَلَدٍ يَكُونُ عَلَيَّ وَبَالًا، وَمِنْ مَالٍ يَكُونُ عَلَيَّ عَذَابًا، وَمِنْ خَلِيلٍ مَاكِرٍ عَيْنَاهُ تَرَانِي وَقَلْبُهُ يَرْعَانِي إِنْ رَأَى حَسَنَةً دَفَنَهَا وَإِنْ رَأَى سَيِّئَةً أَذَاعَهَا»
ஸயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி தாவூத் (அலை) அவர்களின் துஆக்களில் கீழ்க்கண்ட துஆவும் ஒன்றாக இருந்தது:
“அல்லாஹ்வே! தீய அண்டை வீட்டாரை விட்டு உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும், முதுமைக்கு முன்னரே என்னை நரைக்கச் செய்யும் மனைவியை (கணவனை) விட்டும், எனக்குக் கேடாக (சிரமமாக) இருக்கும் சந்ததியினரை விட்டும், எனக்கு வேதனையாக அமையும் செல்வத்தை விட்டும், கண்கள் என்னைப் பார்த்திருந்தாலும், உள்ளம் என்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் வஞ்சகமுள்ள நண்பனை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். அவன் என் நன்மையைக் கண்டால் அதை மறைத்துவிடுவான்; என் தீமையைக் கண்டால் அதைப் பரப்பிவிடுவான்.
- ஹதீஸு அபூஸயீத் அல்அஷஜ்-69.
حديث أبي سعيد الأشج (ص149):
69 – حدثنا أبو خالد عن ابن عجلان عن سعيد بن أبي سعيد قال كان من دعاء داود عليه السلام اللهم إني أعوذ بك من جار السوء ومن زوج تشيبني قبل المشيب ومن ولد يكون علي ربا (1) ومن مال يكون علي عذاباً ومن خليل ماكرٍ عيناه ترياني وقلبه يرعاني إذا رأى حسنة دفنها وإن رأى سيئة أذاعها
…
- அத்துஆ-தப்ரானீ-1339.
الدعاء للطبراني (ص: 399)
1339 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، ثنا الْحَسَنُ بْنُ حَمَّادٍ الْحَضْرَمِيُّ، ثنا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ، وَمِنْ زَوْجٍ تُشَيِّبُنِي قَبْلَ الْمَشِيبِ، وَمِنْ وَلَدٍ يَكُونُ عَلَيَّ رِبًا، وَمِنْ مَالٍ يَكُونُ عَلَيَّ عَذَابًا، وَمِنْ خَلِيلٍ مَاكِرٍ عَيْنَهُ تَرَانِي وَقَلْبُهُ تَرْعَانِي إِنْ رَأَى حَسَنَةً دَفَنَهَا، وَإِذَا رَأَى سَيِّئَةً أَذَاعَهَا»
…
1 . இந்தச் செய்தியை இப்னு அஜ்லான் அவர்கள், ஸயீத் அல்மக்புரீ அவர்களின் சொல்லாக-தாவூத் (அலை) அவர்களின் துஆவாக அறிவித்துள்ளார்.
2 . ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபி (ஸல்) அவர்களின் துஆவாக அறிவித்துள்ளார்.
இப்னு அஜ்லான் அறிவிக்கும் இந்த வகை கருத்துவேறுபாடுள்ள அறிவிப்பாளர்தொடர் விமர்சனத்திற்குரியது.
சமீப விமர்சனங்கள்