தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-693

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

சுலைமான் நபி அவர்கள் பைத்துல் முகத்தஸைக் கட்டிய பிறகு மூன்று நற்பேறுகளை மகத்தவமும் மாண்பும் கொண்ட அல்லாஹ்விடம் கேட்டார்கள். (அவை:) உண்மையான ஞானத்தை (பொருத்தமான தீர்ப்பை) கேட்டார்கள். அது வழங்கப்பட்டது. (மேலும், மகத்துவமும் மாண்பும் கொண்ட அல்லாஹ்விடம்) தமக்குப் பிறகு யாருக்கும் வழங்கப்படாத ஆட்சியதிகாரத்தைக் கேட்டார்கள். அதுவும் வழங்கப்பட்டது. மஸ்ஜிதைக் கட்டிய பிறகு அல்லாஹ்விடம், எவரும் இங்கு தொழுகையைத் தவிர வேறெந்த வலிமையும் பெறக்கூடாது; அத்தொழுகை மூலம் அவரது தாய் அவரைப் பெற்றெடுத்த தினத்தைப்போன்று அவர் தமது பாவங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(நஸாயி: 693)

فَضْلُ الْمَسْجِدِ الْأَقْصَى وَالصَّلَاةِ فِيهِ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنِ ابْنِ الدَّيْلَمِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

أَنَّ سُلَيْمَانَ بْنَ دَاوُدَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَنَى بَيْتَ الْمَقْدِسِ سَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ خِلَالًا ثَلَاثَةً: سَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ حُكْمًا يُصَادِفُ حُكْمَهُ فَأُوتِيَهُ، وَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِهِ فَأُوتِيَهُ، وَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ حِينَ فَرَغَ مِنْ بِنَاءِ الْمَسْجِدِ أَنْ لَا يَأْتِيَهُ أَحَدٌ لَا يَنْهَزُهُ إِلَّا الصَّلَاةُ فِيهِ أَنْ يُخْرِجَهُ مِنْ خَطِيئَتِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-693.
Nasaayi-Shamila-693.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-686.




  • இந்த செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.

1 . மது அருந்துவதால் கிடைக்கும் தண்டனை.

(பார்க்க: நஸாயீ-5664)

2 . தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஒருவர் நல்லவரா?, கெட்டவரா? என்று விதியில் எழுதப்படுதல்.

3 . ஸுலைமான் (அலை) அவர்கள் கேட்ட 3 துஆவின் அடிப்படையில் பைத்துல் மக்திஸில் தொழுதவரின் பாவங்கள் மன்னிக்கப்படுதல்.

சிலர் இந்த மூன்று தகவல்களையும் சேர்த்து அறிவித்துள்ளனர். சிலர் தனித்தனியாகவும் அறிவித்துள்ளனர்.


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வரும் செய்திகள்:

  • அப்துல்லாஹ் பின் ஃபைரோஸ் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க : அஹ்மத்-6644 , …இப்னு மாஜா-1408 , நஸாயீ-693 ,

…முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-,

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.