தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-78

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

78.

நபித்தோழர்கள் சிலர் உளூச் செய்வதற்காகத் தண்ணீரைத் தேடினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களில் எவரிடமாவது சிறிதளவு தண்ணீர் இருக்கின்றதா? என்று கேட்டார்கள். (சிறிதளவு தண்ணீர் கொண்டு வரப்பட்டவுடன்) அந்தத் தண்ணீரில் தமது கையை வைத்தார்கள்.

அல்லாஹ்வின் பெயரால் உளூச் செய்யுங்கள் என்று கூறினார்கள். அவர்களின் விரல்களிலிருந்து தண்ணீர் வெளிப்பட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (அப்போது) நீங்கள் எத்தனை நபர்கள் இருந்தீர்கள்? என்று நான் கேட்டதற்கு சுமார் எழுபது நபர்கள் என்று அனஸ் (ரலி) பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்:

ஸாபித்

ஸாபித் பின் அஸ்லம்-அல்-பனானீ (ரஹ்) – Thabit bin Aslam Albanani

இறப்பு: ஹிஜ்ரி 127

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸாபித் பின் அஸ்லம்

தந்தை பெயர்: அஸ்லம்

புனைப்பெயர்: அபூ முஹம்மத்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா

இறப்பு: ஹிஜ்ரி 127

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸாபித் பின் அஸ்லம் அல்-பனானீ ரஹ் ஒரு தாபிஈ ஆவார். இவர் பஸராவைச் சேர்ந்தவர். ஹதீஸ் கலையில் இவர் பலமானவர் என்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவர் அனஸ் பின் மாலிக் ரலி உட்பட பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவர் ஹிஜ்ரி 127 இல் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அனஸ் பின் மாலிக், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், இப்னு உமர், அப்துல்லாஹ் பின் முகஃப்பல், உமர் பின் அபூ ஸலமா, ஷுஐப், அப்துல்லாஹ் பின் ரபாஹ், அப்துர்ரஹ்மான் பின் அபூ லைலா, முத்ரஃப் பின் அப்துல்லாஹ், அபூ ராஃபிஃ அஸ்ஸாஇக், ஷஹ்ர் பின் ஹவ்ஷப், பக்ர் பின் அப்துல்லாஹ் அல்முஸனீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஹுமைத் அத்தவீல், ஷுஃபா பின் அல்-ஹஜ்ஜாஜ், ஜரீர் பின் ஹாஸிம், ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாத் பின் ஸைத், மஃமர் பின் ராஷித், ஹம்மாம் பின் யஹ்யா, அபூ அவானா அல்-வத்தாஹ், ஜஃபர் பின் ஸுலைமான், ஸுலைமான் பின் அல்-முகீரா, தாவூத் பின் அபூ ஹிந்த், ஸுலைமான் அல்-அஃமஷ்

வேறு பெயர்கள்: ஸாபித் அல்-பனானீ, ஸாபித்


ஆதாரம்: muslimscholars.info (11269) · Should verify


بَابُ التَّسْمِيَةِ عِنْدَ الْوُضُوءِ

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، وَقَتَادَةُ، عَنْ أَنَسٍ قَالَ:

طَلَبَ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضُوءًا. فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ مَعَ أَحَدٍ مِنْكُمْ مَاءٌ؟» فَوَضَعَ يَدَهُ فِي الْمَاءِ وَيَقُولُ: «تَوَضَّئُوا بِسْمِ اللَّهِ». فَرَأَيْتُ الْمَاءَ يَخْرُجُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ قَالَ ثَابِتٌ: قُلْتُ لِأَنَسٍ: كَمْ تُرَاهُمْ؟ قَالَ: نَحْوًا مِنْ سَبْعِينَ


Nasaayi-Tamil-77.
Nasaayi-TamilMisc-77.
Nasaayi-Shamila-78.
Nasaayi-Alamiah-77.
Nasaayi-JawamiulKalim-77.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.