தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-1543

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

சீனா சென்றேனும் கல்வியை தேடு. ஏனெனில் கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

 

பைஹகீ (நூலாசிரியர்) கூறுகிறார்:

இந்த செய்தி பிரபலமானதாகும். ஆனால் இதன் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானதாகும். இது பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பலவீனமானதாகும்.

(shuabul-iman-1543: 1543)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أخبرنا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عُقْبَةَ الشَّيْبَانِيُّ، حدثنا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ، ح وَأَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ الْأَصْبَهَانِيُّ، أخبرنا أَبُو سَعِيدِ بْنُ زِيَادٍ، حدثنا جَعْفَرُ بْنُ عَامِرٍ الْعَسْكَرِيُّ، قَالَا: حدثنا الْحَسَنُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي عَاتِكَةَ، – وَفِي رِوَايَةِ أَبِي عَبْدِ اللهِ – حدثنا أَبُو عَاتِكَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

اطْلُبُوا الْعِلْمَ وَلَوْ بِالصِّينِ، فَإِنَّ طَلَبَ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

هَذَا حَدِيثٌ مَتْنُهُ مَشْهُورٌ، وَإِسْنَادُهُ ضَعِيفٌ ” وَقَدْ رُوِيَ مِنْ أَوْجُهٍ، كُلُّهَا ضَعِيفٌ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-1543.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-1539.




إسناد شديد الضعف فيه طريف بن سلمان الكوفي وهو منكر الحديث

  • இதை பதிவு செய்த இமாம் பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள் இது பலவீனமான செய்தி என குறிப்பிட்டுள்ளார்கள். காரணம் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் طريف بن سلمان தரீஃப் பின் ஸல்மான் என்ற அபூ ஆத்திகா என்பவர் ஹதீஸ் கலையில் விடப்பட வேண்டியவர் (பொய்யர்) ஆவார்.
  • இந்தச் செய்தியில் இடம்பெறும் அபூ ஆத்திகா என்பவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட வேண்டியவராவர். மேலும் இந்தச் செய்தி அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது. இது பொய்யானதாகும். இச்செய்தியில் இடம்பெறும் வஹப் பின் வஹப் என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டி சொல்லக்கூடியவர் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் பார்க்க : முஸ்னத் பஸ்ஸார்-95 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.