அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாருக்கு அவர்களின் மார்க்க விஷயங்களில் பயனளிக்கக்கூடிய நாற்பது ஹதீஸ்களை யார் மனனம் செய்கிறாரோ, அவர் மறுமை நாளில் அறிஞர்களுடன் எழுப்பப்படுவார்.
மேலும் ஒரு அறிஞர், (அறிஞரல்லாத) வணக்கசாலியை விட எழுபது படித்தரங்கள் மேலானவராக இருப்பார். (அவைகளில்) இரு படித்தரங்களுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(shuabul-iman-1596: 1596)أَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ، أخبرنا أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ، أخبرنا أَبُو يَعْلَى، حدثنا عَمْرُو بْنُ حُصَيْنٍ، حدثنا ابْنُ عُلَاثَةَ، حدثنا خُصَيْفٌ عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَنْ حَفِظَ عَلَى أُمَّتِي أَرْبَعِينَ حَدِيثًا فِيمَا يَنْفَعُهُمْ مِنْ أَمْرِ دِينِهِمْ بُعِثَ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْعُلَمَاءِ، وَفُضِّلَ الْعَالِمُ عَلَى الْعَابِدِ سَبْعِينَ دَرَجَةً، اللهُ أَعْلَمُ بِمَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-1596.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-1593.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம்
2 . அபூஸஃத் அல்மாலீனீ
3 . அபூஅஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அதீ
4 . அபூயஅலா
5 . அம்ர் பின் ஹுஸைன்
6 . இப்னு உலாஸா
7 . குஸைஃப்
8 . முஜாஹித்
9 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32227-அம்ர் பின் ஹுஸைன் என்பவரை பொய்யர்; கைவிடப்பட்டவர் என்று பல ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/264)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: … ஷுஅபுல் ஈமான்-1596, …
மேலும் பார்க்க: ஷுஅபுல் ஈமான்-1597.
சமீப விமர்சனங்கள்