தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-1597

A- A+


ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், “ஒரு மனிதர் எந்த அளவுக்கு அறிவை அடைந்தால், அவர் ஓர் (ஃபகீஃ) மார்க்க அறிஞராக கருதப்படுவார்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் மார்க்க விஷயங்கள் தொடர்பான நாற்பது ஹதீஸ்களை யார் மனனம் செய்கிறாரோ, அவரை ஓர் மார்க்க அறிஞராக அல்லாஹ் எழுப்புவான். மேலும், மறுமை நாளில் நான் அவருக்கு பரிந்துரையாளனாகவும், சாட்சியாகவும் இருப்பேன்.

(shuabul-iman-1597: 1597)

أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْفَقِيهُ، قَالَ: حَدَّثَنِي أَبُو الْحُسَيْنِ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ حُبَيْشٍ، حَدَّثَنِي عَمِّيَ أَحْمَدُ بْنُ حُبَيْشٍ، حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ النُّعْمَانِ الْبَصْرِيُّ، حدثنا عَمْرُو بْنُ الْحَارِثِ، حدثنا عَبْدُ الْمَلِكِ بْنُ هَارُونَ بْنِ عَنْتَرَةَ ح، وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ، أخبرنا أَبُو عَبْدِ اللهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الصَّفَّارُ، حدثنا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ السُّيُوطِيُّ، حدثنا عَمْرُو بْنُ مُحَمَّدٍ صَاحِبُ يَعْلَى بْنِ الْأَشْدَقِ، حدثنا عَبْدُ الْمَلِكِ بْنُ هَارُونَ بْنِ عَنْتَرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ:

سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا حَدُّ الْعِلْمِ إِذَا بلغهُ الرَّجُلُ كَانَ فَقِيهًا؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ حَفِظَ عَلَى أُمَّتِي أَرْبَعِينَ حَدِيثًا مِنْ أَمْرِ دِينِهَ بَعَثَهُ اللهُ فَقِيهًا، وَكُنْتُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ شَافِعًا وَشَهِيدًا


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-1597.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-1594.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம்

2 . அபுல்ஹஸன்-முஹம்மத் பின் யஃகூப் அல்ஃபகீஃ

3 . அபுல்ஹுஸைன்-முஹம்மத் பின் அலீ பின் ஹுபைஷ்

4 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹுபைஷ் (தந்தையின் சகோதரர்)

5 . அப்துல்லாஹ் பின் நுஃமான் அல்பஸரீ

6 . அம்ர் பின் ஹாரிஸ்

7 . அப்துல்மலிக் பின் ஹாரூன் பின் அன்த்தரா

8 . அவரது தந்தை (ஹாரூன் பின் அன்த்தரா)

9 . அவரது பாட்டனார் (அன்த்தரா பின் அப்துர்ரஹ்மான்)

10 . அபுத்தர்தா (ரலி)


1 . பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம்

2 . அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமீ

3 . அபூஅப்துல்லாஹ்-முஹம்மத் பின் அப்துல்லாஹ் அஸ்ஸஃப்பார்

4 . இப்ராஹீம் பின் இஸ்மாயீல் ஸுயூத்தீ

5 . அம்ர் பின் முஹம்மத் (யஃலா பின் அஷ்தக் என்பவரின் தோழர்)

6 . அப்துல்மலிக் பின் ஹாரூன் பின் அன்த்தரா

7 . அவரது தந்தை (ஹாரூன் பின் அன்த்தரா)

8 . அவரது பாட்டனார் (அன்த்தரா பின் அப்துர்ரஹ்மான்)

9 . அபுத்தர்தா (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26674-அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவரை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    போன்ற பல ஹதீஸ்கலை அறிஞர்கள் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சித்துள்ளனர்.

(நூல்: லிஸானுல் மீஸான் 5/276)

  • மேலும் இதில் வரும் முஹம்மத் பின் யஃகூப், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஹுபைஷ், அம்ர் பின் முஹம்மத்
    ஆகியோரின் நிலை அறியப்படவில்லை.

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


1 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: … ஷுஅபுல் ஈமான்-1597, 1598, …


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-1596.


كشف الخفاء ط القدسي (2/ 246):
2465 – ‌من ‌حفظ على أمتي ‌أربعين حديثا بعث يوم القيامة فقيها.
رواه أبو نعيم بنحوه عن ابن عباس وابن مسعود.
وأخرجه ابن الجوزي في العلل المتناهية عن أنس وعلي ومعاذ وأبي هريرة وغيرهم.
ورواه ابن عدي عن ابن عباس بلفظ ” ‌من ‌حفظ على أمتي ‌أربعين حديثا من السنة كنت له شفيعا وشهيدا يوم القيامة “.
وأخرجه ابن النجار في تاريخه عن أبي سعيد الخدري بلفظ ‌من ‌حفظ على أمتي ‌أربعين حديثا من سنتي أدخلته يوم القيامة في شفاعتي “.


وقال الدارقطني طرقه كلها ضعيفة وليس بثابت.
ولذا قال الحافظ ابن حجر رحمه الله تعالى: جمعت طرقه في جزء، ليس فيها طريق تسلم من علة قادحة.
وقال البيهقي في شعبه عقب حديث أبي الدرداء رضي الله تعالى عنه: هذا متن مشهور فيما بين الناس وليس له إسناد صحيح.
وقال ابن عساكر: فيها مقال كلها.
وقال النووي في خطبة أربعينه: واتفق الحفاظ على أنه حديث ضعيف وإن كثرت طرقه انتهى.
وقال العلامة ابن حجر المكي رحمه الله تعالى في شرحه [أي شرح الأربعين للنووي] : ولا يرد على قول المصنف قول الحافظ أبي طاهر السلفي في أربعينه أنه روي من طرق وثقوا بها وركنوا إليها وعرفوا صحتها وعولوا عليها انتهى، لأنه معترض، وإن أجاب عنه الحافظ المنذري بأنه يمكن أن يكون سلك في ذلك مسلك من رأى أن الأحاديث الضعيفة، إذا انضم بعضها لبعض، أحدثت قوة.
ولا يرد على المصنف ذِكر ابن الجوزي له في الموضوعات، لأنه
تساهل منه، فالصواب أنه ضعيف لا موضوع. انتهى.
ثم قال: وأما خبر ” ‌من ‌حفظ على أمتي حديثا واحدا كان له كأجر أحد وسبعين نبيا صديقا ” فهو موضوع.
انتهى كلام ابن حجر.

இந்தக் கருத்து இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி), அபூஸயீத் (ரலி) போன்ற சுமார் 10 க்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் வழியாக சில நூல்களில் வந்துள்ளது.

தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம், இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இப்னு அஸாகிர், நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
இமாம் போன்ற பல ஹதீஸ்கலை அறிஞர்கள் இவை அனைத்தும் பலவீனமானவை; ஒன்று கூட ஆதாரத்திற்கு ஏற்றதல்ல என்று கூறியுள்ளனர். (இவைகளில் சிலவை பொய்யர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதனால் தான் இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
அவர்கள் இதை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் கூறியுள்ளார்.)

(நூல்: கஷ்ஃபுல் கஃபா வ முஸீலுல் இல்பாஸ்-2465, 2/246)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.