தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-4532

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாகப் பேச்சில் கவர்ச்சி உள்ளது. உங்களில் ஒருவர் தனது சகோதரரிடம் ஏதேனும் உதவிக் கேட்பதாக இருந்தால் அவரைப் புகழ ஆரம்பித்து; அவரின் முதுகை முறித்துவிடவேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

(shuabul-iman-4532: 4532)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، نا أَبُو الْعَبَّاسِ هُوَ الْأَصمُّ، نا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ حَيَّانَ الْمَدَائِنِيُّ، نا الْحَسَنُ بْنُ قُتَيْبَةَ، نا يُونُسُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، أَخِي الْأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا، فَإِذَا طَلَبَ أَحَدُكُمْ مِنْ أَخِيهِ حَاجَةً، فَلَا يَبْدَأْ بِالْمَدْحِ فَيَقْطَعَ ظَهْرَهُ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-4532.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-4523.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம்

2 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்-அபூஅப்துல்லாஹ்-அல்ஹாஃபிள்

3 . முஹம்மத் பின் யஃகூப்-அபுல்அப்பாஸ்-அல்அஸம்

4 . முஹம்மத் பின் ஈஸா பின் ஹய்யான்-அல்மதாஇனீ

5 . ஹஸன் பின் குதைபா

6 . யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக்

7 . அம்ர் பின் அப்துல்லாஹ்-அபூஇஸ்ஹாக்-அஸ்ஸபீஈ

8 . அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (அஸ்வத் பின் யஸீத் என்பவரின் சகோதரர்)

9 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி-முஹம்மத் பின் ஈஸா பலவீனமானவர். ராவி-ஹஸன் பின் குதைபா மிக பலவீனமானவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


மேலும் பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-779.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.