தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-779

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

ஒருவரின் உதவி தேவையென்றால் அவரிடம் சாதாரணமாகக் கேட்க வேண்டும்; அவரைப் புகழக்கூடாது.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் ஒருவர் (மற்றவரிடம்) உதவிக் கேட்டால் அதை சாதாரணமாகக் கேட்கட்டும். ஏனெனில் அவருக்கு விதியில் எழுதப்பட்டதே கிடைக்கும். உதவி செய்பவரிடம் வந்து அவரைப் புகழ்ந்து; அவரின் முதுகை முறித்து விடவேண்டாம்.

அறிவிப்பவர்: அபுல்அஹ்வஸ் (ரஹ்)

(al-adabul-mufrad-779: 779)

بَابُ إِذَا طَلَبَ فَلْيَطْلُبْ طَلَبًا يَسِيرًا وَلَا يَمْدَحُهُ

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنِي الْأَعْمَشُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ:

إِذَا طَلَبَ أَحَدُكُمُ الْحَاجَةَ فَلْيَطْلُبْهَا طَلَبًا يَسِيرًا، فَإِنَّمَا لَهُ مَا قُدِّرَ لَهُ، وَلَا يَأْتِي أَحَدُكُمْ صَاحِبَهُ فَيَمْدَحَهُ، فَيَقْطَعَ ظَهْرَهُ


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-779.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-775.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . ஃபள்ல் பின் துகைன்-அபூநுஐம்

3 . ஸுலைமான் பின் மிஹ்ரான்-அஃமஷ்

4 . அம்ர் பின் அப்துல்லாஹ்-அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ

5 . அவ்ஃப் பின் மாலிக்-அபுல்அஹ்வஸ்

6 . அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


இந்தச் செய்தி நபியின் சொல்லாகவும், இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் சொல்லாகவும் வந்துள்ளது. நபியின் சொல்லாக வந்துள்ள அறிவிப்பாளர்தொடரில் பலவீனமானவர்கள் உள்ளனர்.

இது இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் சொல்லாக வந்துள்ள அறிவிப்பாளர்தொடர் சரியானது என அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: ஸஹீஹ் அதப் முஃப்ரத்-779)

مسند ابن الجعد (ص75):
409 – حَدَّثَنَا مَحْمُودٌ، نا يَحْيَى بْنُ آدَمَ، نا حَفْصُ بْنُ غِيَاثٍ قَالَ: سَمِعْتُ الْأَعْمَشَ يَقُولُ: «‌كُنْتُ ‌إِذَا ‌خَلَوْتُ ‌بِأَبِي ‌إِسْحَاقَ ‌حَدَّثَنَا ‌بِحَدِيثِ ‌عَبْدِ ‌اللَّهِ ‌غَضًّا، ‌لَيْسَ ‌عَلَيْهِ ‌غُبَارٌ»

المعرفة والتاريخ – ت العمري – ط العراق (2/ 636):
37 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ ثنا الْأَعْمَشُ قَالَ:
‌كُنْتُ ‌إِذَا ‌خَلَوْتُ ‌بِأَبِي ‌إِسْحَاقَ ‌حَدَّثَنَا ‌بِحَدِيثِ ‌عَبْدِ ‌اللَّهِ غَضًّا.

நான் அபூஇஸ்ஹாக்குடன் தனித்திருக்கும்போது, அவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஹதீஸை புத்தம் புதியதாக எந்தக் குறையுமின்றி எங்களுக்கு அறிவிப்பார் என்று அஃமஷ் கூறியதாக ஹஃப்ஸ் பின் ஃகியாஸ், வகீஃ பின் ஜர்ராஹ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

(நூல்கள்: முஸ்னத் இப்னுல் ஜஃத்-409, ஸியரு அஃலாமின் நுபலா-6/348, அல்மஃரிஃபது வத்தாரீக்-2/636)


المعرفة والتاريخ – ت العمري – ط العراق (2/ 637):
‌وَحَدِيثُ ‌سُفْيَانَ ‌وَأَبِي ‌إِسْحَاقَ ‌وَالْأَعْمَشِ ‌مَا ‌لَمْ ‌يُعْلَمْ ‌أَنَّهُ ‌مُدَلِّسٌ ‌يَقُومُ ‌مَقَامَ ‌الْحُجَّةِ.

ஸுஃப்யான், அபூஇஸ்ஹாக், அஃமஷ் ஆகியோர் குறிப்பிட்ட ஹதீஸில் தத்லீஸ் செய்துள்ளனர் என்பது அறியப்படாவிட்டால் அதை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும் என யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அல்ஃபஸவீ கூறியுள்ளார்.

(நூல்: அல்மஃரிஃபது வத்தாரீக்-2/637)


மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18518-அஃமஷ், ராவீ-32397-அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ ஆகியோர் பலமானவர்கள் என்றாலும் தத்லீஸ் செய்பவர்கள் என்ற விமர்சனம் இருந்தாலும் இந்தத் தகவல் அடிப்படையில் தான் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற அறிஞர்கள் அஃமஷ் அவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர் எனத் தெரிகிறது.

سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها (3/ 270):
… لولا أن أبا إسحاق وهو السبيعي عمرو بن عبد الله مدلس
وقد عنعنه في جميع الطرق عنه مع كونه كان اختلط، فأنا متوقف في صحته بعد أن كنت تابعا في تصحيحه برهة من الزمن غيري. والله أعلم.

இதே வகை அறிவிப்பாளர்தொடர் இடம்பெற்ற வேறொரு செய்தியைப் பற்றி அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறும்போது, இதை நான் சில காலங்களாக சரியானது என்று கூறினேன். அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ தத்லீஸ் செய்பவர் என்பதாலும், அந்த செய்தியில் எதிலும் தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டேன் என்று கூறாததாலும் அந்தக் கருத்தை விட்டு நான் திரும்பி விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அஸ்ஸஹீஹா-1273, தராஜுஆத் அல்பானீ-1/15)


1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அஃமஷ் —> அபூஇஸ்ஹாக் —> அபுல்அஹ்வஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26264, அல்அதபுல் முஃப்ரத்-779, தாரீகு ஜுர்ஜான்-1/63, அல்முஃஜமுல் கபீர்-8883, ஷுஅபுல் ஈமான்-206, முஃஜமுஷ் ஷுயூகில் கபீர்-தஹபீ-1/375,


  • தாரீகு ஜுர்ஜான்-1/63.

تاريخ جرجان (ص: 63)
حَدَّثَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْقَصْرِيُّ الْفَقِيهُ أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ أَخْبَرَنَا أَحْمَد بْن عَلِيّ بْن عمران حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا الأَعْمَشُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي الأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: إذا طلب أحدكم الْحَاجَةَ فَلْيَطْلُبْهَا طَلَبًا يَسِيرًا فَإِنَّمَا لَهُ مَا قُدِّرَ لَهُ وَلا يأتي أَحَدُكُمْ صَاحِبَهُ فَيَمْدَحْهُ فَيَقْطَعْ ظَهْرَهُ.


  • முஃஜமுஷ் ஷுயூகில் கபீர்-தஹபீ-1/375.

معجم الشيوخ الكبير للذهبي (1/ 375)
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عُمَرَ، وَخَلْقٌ، قَالُوا: أنا ابْنُ عَبْدِ الدَّائِمِ، أنا يَحْيَى الثَّقَفِيُّ، أنا أَبُو عَلِيٍّ الْمُقْرِئُ، حُضُورًا، أنا أَبُو نُعَيْمٍ، أنا ابْنُ فَارِسٍ، نا أَحْمَدُ بْنُ الْفُرَاتِ، أنا أَبُو نُعَيْمٍ، نا الأَعْمَشُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: يَأْتِي أَحَدُكُمْ صَاحِبَهُ فَيَمْدَحُهُ فَيَقْطَعُ ظَهْرَهُ، إِذَا طَلَبَ أَحَدُكُمْ إِلَى أَخِيهِ حَاجَةً فَلْيَطْلُبْهَا طَلَبًا يَسِيرًا، فَإِنَّمَا هُوَ قَدَرُ اللَّهِ عَزَّ وَجَلَّ


  • ஹஸன் பின் குதைபா —> யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக் —> அபூஇஸ்ஹாக் —> அப்துர்ரஹ்மான் பின் யஸீத் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: ஃபவாஇத் அபுல்காஸிம்-58, ஷுஅபுல் ஈமான்-4532, முஸ்னத் ஃபிர்தவ்ஸ்-தைலமீ-1172, ஸஹ்ருல் ஃபிர்தவ்ஸ்-இப்னு ஹஜர்-328,


  • ஃபவாஇத் அபுல்காஸிம்-58.

الثاني من الفوائد المنتقاة لأبي القاسم الأزجي
(58)- [58 ] أَخْبَرَنَا عُثْمَانُ، ثنا مُحَمَّدُ بْنُ عِيسَى، ثنا الْحَسَنُ بْنُ قُتَيْبَةَ، ثنا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، أَخِي الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ: ” إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا، وَإِذَا طَلَبَ أَحَدُكُمْ مِنْ أَخِيهِ حَاجَةً فَلا يَبْدَأْهُ بِالْمِدْحَةِ فَيَقْطَعَ ظَهْرَهُ “

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாகப் பேச்சில் கவர்ச்சி உள்ளது. உங்களில் ஒருவர் தனது சகோதரரிடம் ஏதேனும் உதவிக் கேட்பதாக இருந்தால் அவரைப் புகழ ஆரம்பித்து; அவரின் முதுகை முறித்துவிடவேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அப்துல்அஸீஸ் பின் அலீ-அபுல்காஸிம்-அல்அஸ்ஜீ

2 . உஸ்மான் பின் அஹ்மத்

3 . முஹம்மத் பின் ஈஸா பின் ஹய்யான்-அல்மதாஇனீ

4 . ஹஸன் பின் குதைபா-அபூஅலீ-அல்குஸாஈ

5 . யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக்

6 . அம்ர் பின் அப்துல்லாஹ்-அபூஇஸ்ஹாக்-அஸ்ஸபீஈ

7 . அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (அஸ்வத் பின் யஸீத் என்பவரின் சகோதரர்)

8 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-42062-முஹம்மத் பின் ஈஸா பின் ஹய்யான்-அல்மதாஇனீ என்பவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்களின் மாணவரான அபூபக்ர் பர்கானீ அவர்கள், இவரை பலமானவர் என்று கூறியுள்ளார்.
  • அபூஅஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    இமாம், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோர் இவர் பலவீனமானவர் என்றும் விடப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர். அபூஅஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் இவர் கவனக்குறையுள்ளவர். ஹதீஸ் என்றால் என்னவென்று தெரியாதவர் என சிலர் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: லிஸானுல் மீஸான்-7/428)

  • மேலும் இதில் வரும் ராவீ-12388-ஹஸன் பின் குதைபா-அபூஅலீ-அல்குஸாஈ என்பவர் பற்றி அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    ஆகியோர் பலவீனமானவர் என்ற கருத்தில் கூறியுள்னனர்.
  • உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்கள் இவர் அதிகம் தவறிழைப்பவர் என்றும், அபூபக்ர் பர்கானீ அவர்கள், இவரை தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் விடப்பட்டவர் என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் மட்டுமே, இவரை சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/33, அஸ்ஸிகாத்-8/168, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/173, தாரீகுபஃக்தாத்-8/416, தாரீகுல் இஸ்லாம்-5/297, லிஸானுல் மீஸான்-3/106)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-2662, 2663, 5146,

2 comments on Al-Adabul-Mufrad-779

  1. அஸ்ஸலாமு அலைகும்.
    இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அஃமஸ் மற்றும் அபூ இஸ்ஹாக் ஆகிய இருவரும் தத்லீஸ் செய்யக்கூடியவர்கள் என்கிறபோது இது எப்படி பலமான செய்தியாக இருக்க இயலும்?

    1. வ அலைக்கும் ஸலாம்.

      இந்தச் செய்தியை அல்பானீ போன்ற சில அறிஞர்கள் நபித்தோழரின் சொல் என்பதே சரியான அறிவிப்பாளர்தொடர் என்று கூறியிருந்ததால் தான் இவ்வாறு நாம் ஆரம்பத்தில் தரம் பதிவிட்டுள்ளோம்.

      நீங்கள் கூறிய விமர்சனத்தை அப்போது கவனிக்கவில்லை. ஜஸாகல்லாஹு கைரா.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.