தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-8883

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் ஒருவருக்கு (மற்றவரிடமிருந்து) உதவி தேவையிருந்தால் அதை சாதாரணமாகக் கேட்கட்டும். ஏனெனில் அவருக்கு விதியில் எழுதப்பட்டதே கிடைக்கும். உதவி செய்பவரிடம் வந்து அவரைப் புகழ்ந்து; அவரின் முதுகை முறித்து விடவேண்டாம்.

அறிவிப்பவர்: அபுல்அஹ்வஸ் (ரஹ்)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 8883)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا أَبُو نُعَيْمٍ، ثنا الْأَعْمَشُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ:

«إِذَا طَلَبَ أَحَدُكُمُ الْحَاجَةَ فَلْيَطْلُبْهَا سِرًّا، فَإِنَّمَا لَهُ مَا قُدِّرَ لَهُ، وَلَا يَأْتِي أَحَدُكُمْ صَاحِبَهُ فَيَمْدَحَهُ فَيَقْصِمُ ظَهْرَهُ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-8883.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-8795.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . அலீ பின் அப்துல்அஸீஸ்

3 . ஃபள்ல் பின் துகைன்-அபூநுஐம்

4 . ஸுலைமான் பின் மிஹ்ரான்-அஃமஷ்

5 . அம்ர் பின் அப்துல்லாஹ்-அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ

6 . அவ்ஃப் பின் மாலிக்-அபுல்அஹ்வஸ்

7 . அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


மேலும் பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-779.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.