ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
கதாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான், மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு காளான்களை எடுத்து சாறு பிழிந்து அதை ஒரு கண்ணாடி குடுவையில் எடுத்துக்கொண்டேன். பின்பு அதை (கண்ணோய் ஏற்பட்டிருந்த) என் அடிமைப் பெண்ணின் கண்ணில் இட அவள் குணமடைந்தாள் என்று அபூஹுரைரா (ரலி) கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது.
(திர்மிதி: 2069)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُعَاذٌ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ: حُدِّثْتُ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ:
«أَخَذْتُ ثَلَاثَةَ أَكْمُؤٍ أَوْ خَمْسًا أَوْ سَبْعًا فَعَصَرْتُهُنَّ فَجَعَلْتُ مَاءَهُنَّ فِي قَارُورَةٍ فَكَحَلْتُ بِهِ جَارِيَةً لِي فَبَرَأَتْ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2069.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1995.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34194-கதாதா (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடம் நேரடியாக இந்த செய்தியை கேட்காமல் வேறு ஒருவர் மூலமே கேட்டுள்ளார். அவர் யார் என்பது பற்றி இதில் விவரம் இல்லை என்பதால் இது பலவீனமான, மவ்கூஃபான அறிவிப்பாளர் தொடராகும். - என்றாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இதை சரியானது என்று கூறியுள்ளார். (நூல்: ஃபத்ஹுல் பாரீ-5708)
மேலும் பார்க்க: திர்மிதீ-2066 .
சமீப விமர்சனங்கள்