தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2146

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 11

எந்த உயிரும் தனக்கென எழுதப்பட்டுள்ள இடத்தில்தான் மரணிக்கும் என்பது தொடர்பாக வந்துள்ளவை.

  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஓர் அடியார் இறப்பார் என அல்லாஹ் தீர்மானித்துவிட்டால், அந்த இடத்தில் அவருக்கு ஒரு தேவையை அவன் ஏற்படுத்திவிடுவான்.

அறிவிப்பவர்: மத்தர் பின் உகாமிஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அபூஅஸ்ஸா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தர் பின் உக்காமிஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், ‘ஹஸன் ஃகரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.

மத்தர் பின் உக்காமிஸ் (ரலி) அவர்கள் இந்த நபிமொழியைத் தவிர வேறெதுவும் அறிவித்திருப்பதாக அறியப்படவில்லை.

இந்த ஹதீஸ் மத்தர் பின் உக்காமிஸ் (ரலி) அவர்கள் வழியாக மேலும் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(திர்மிதி: 2146)

بَابُ مَا جَاءَ أَنَّ النَّفْسَ تَمُوتُ حَيْثُ مَا كُتِبَ لَهَا

حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مَطَرِ بْنِ عُكَامِسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا قَضَى اللَّهُ لِعَبْدٍ أَنْ يَمُوتَ بِأَرْضٍ جَعَلَ لَهُ إِلَيْهَا حَاجَةً»

وَفِي البَابِ عَنْ أَبِي عَزَّةَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، وَلَا يُعْرَفُ لِمَطَرِ بْنِ عُكَامِسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ هَذَا الحَدِيثِ

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلٌ، وَأَبُو دَاوُدَ الحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، نَحْوَهُ


Tirmidhi-Tamil-2072.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2146.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2072.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-44615-மத்தர் பின் உகாமிஸ் அவர்கள் நபித்தோழரா? இல்லையா? என்பதில் இரு கருத்து உள்ளது.

1 . இவர் நபி (ஸல்) அவர்களை சந்தித்துள்ளாரா? என்று உஸ்மான் பின் ஸயீத் அத்தாரிமீ அவர்கள், இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்களிடம் கேட்டதற்கு, இவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துள்ளாரா? என்பது எனக்குத் தெரியாது என்றும்; இவர் வழியாக இந்த ஒரு ஹதீஸ் தான் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் பதில் கூறினார்.

2 . இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர், இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்களைப் போன்றே இவர் நபித்தோழரா? என்று தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

(எனவே, இவர் நபித்தோழர் அல்ல என்று இவர்களில் யாரும் உறுதியாகக் கூறவில்லை. ஆனால் இவர்களின் கருத்தை வைத்து சிலர் இவர் நபித்தோழர் இல்லை முடிவு செய்துவிட்டனர்)

3 . அபூபக்ர்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹாரூன் அல்பர்தீஜீ அவர்கள், இவரிடமிருந்து அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ மட்டுமே அறிவித்துள்ளார்; இவர் நபித்தோழர் அல்ல என்று கூறியுள்ளார்.

4 . இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
மிஸ்ஸீ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோர் இவர் நபித்தோழர் என்று கூறியுள்ளனர்.

5 . மேற்கண்ட தகவல் அடிப்படையில் சிலர் இவர் விசயத்தில் கருத்துவேறுபாடு உள்ளது என்று மட்டும் கூறியுள்ளனர்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/287, தஹ்தீபுல் கமால்-28/56, அல்இக்மால்-11/223, அல்காஷிஃப்-4/296, அல்இஸாபா-10/190, தஹ்தீபுத் தஹ்தீப்-4/88, தக்ரீபுத் தஹ்தீப்-1/947, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/501)


மேலும் இதில் வரும் ராவீ-32397-அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (அம்ர் பின் அப்துல்லாஹ் பின் உபைத்) புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோரின் அறிவிப்பாளர் ஆவார்.

  • இவர் பலமானவர் என இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அபூஹாதிம் அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இவர் இறுதிக்காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்று சிலரும்; இவர் மூளைக் குழம்பவில்லை; வயதான காரணத்தால் அவருக்கு சிறிது மறதி ஏற்பட்டது. அப்போது அவரிடம் ஹதீஸைக் கேட்டவர்கள் அவரை விமர்சித்துள்ளனர் என்று சிலரும் கூறியுள்ளனர்.
  • மஃன் பின் அப்துர்ரஹ்மான் மஸ்ஊதீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 121/130
    அபூஜஃபர் தபரீ,பிறப்பு ஹிஜ்ரி 224
    இறப்பு ஹிஜ்ரி 310
    வயது: 86
    அபூஜஃபர் நஹ்ஹாஸ்,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 338
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஆகியோர் இவர் தத்லீஸ் செய்பவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/284)

ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
போன்ற இன்னும் சிலர் இவரிடம் ஆரம்ப காலத்தில் ஹதீஸைக் கேட்டவர்கள் என்பதால் இதில் முதல் விமர்சனம் இல்லை.

இதில் மத்தர் பின் உகாமிஸ் (ரலி) கூஃபாவாசி; அபூஇஸ்ஹாக் அவர்களும் கூஃபாவாசி என்பதுடன் இவர் ஹிஜ்ரீ 30 இல் பிறந்தவர் என்பதால் இந்த செய்தியை மத்தர் பின் உகாமிஸ் (ரலி) அவர்களிடம் நேரடியாக கேட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதால் இதில் தத்லீஸ் என்ற குறையும் இல்லை.

இந்தச் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது என்பதால் இந்த அறிவிப்பாளர்தொடர் குறைந்தபட்சம் ஸஹீஹுன் லிஃகைரிஹீ ஆகும்.


2 . இந்தக் கருத்தில் மத்தர் பின் உகாமிஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-21984 , 21983 , திர்மிதீ-2146 , அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-,

மேலும் பார்க்க: திர்மிதீ-2147 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.