அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஓர் அடியார் இறப்பார் என அல்லாஹ் தீர்மானித்துவிட்டால், ‘அந்த இடத்தில்’ அல்லது ‘அங்கு’ அவருக்கு ஒரு தேவையை அவன் ஏற்படுத்திவிடுவான்.
அறிவிப்பவர்: அபூஅஸ்ஸா (ரலி)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ‘ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) அபூஅஸ்ஸா (ரலி) அவர்கள் நபித்தோழர் ஆவார். அன்னாரின் இயற்பெயர், யஸார் பின் அப்த் ஆகும். (மேற்கண்ட ஹதீஸின் இரண்டாம் அறிவிப்பாளரான) அபுல்மலீஹ் அவர்களின் இயற்பெயர், ஆமிர் பின் உஸாமா பின் உமைர் அல்ஹுதலீ ஆகும். இவரை ஸைத் பின் உஸாமா என்றும் கூறப்படுகிறது.
(திர்மிதி: 2147)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، المَعْنَى وَاحِدٌ، قَالَا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي المَلِيحِ بْنِ أُسَامَةَ، عَنْ أَبِي عَزَّةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِذَا قَضَى اللَّهُ لِعَبْدٍ أَنْ يَمُوتَ بِأَرْضٍ جَعَلَ لَهُ إِلَيْهَا حَاجَةً، أَوْ قَالَ: بِهَا حَاجَةً
هَذَا حَدِيثٌ صَحِيحٌ وَأَبُو عَزَّةَ لَهُ صُحْبَةٌ وَاسْمُهُ يَسَارُ بْنُ عَبْدٍ، وَأَبُو المَلِيحِ اسْمُهُ عَامِرُ بْنُ أُسَامَةَ بْنِ عُمَيْرٍ الهُذَلِيُّ، وَيُقَالُ: زَيْدُ بْنُ أُسَامَةَ
Tirmidhi-Tamil-2073.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2147.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2073.
1 . இந்தக் கருத்தில் யஸார் பின் அப்த்-அபூஅஸ்ஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபுல்மலீஹ் பின் உஸாமா —> யஸார் பின் அப்த் (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-15539 , அல்அதபுல் முஃப்ரத்-780 , திர்மிதீ-2147 , முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-6151 , அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-127 ,
…ஸயீத் பின் மன்ஸூர்-,
…அல்முஃஜமுல் கபீர்-,
2 . மத்தர் பின் உகாமிஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2146 .
3 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-4263 .
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்