தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-4263

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் உங்களில் ஒருவரின் மரணம் நிகழுமென்றிருந்தால் ஒரு தேவை அவரை அந்தஇடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும். அவர் தனது இறுதி காலடியை வைக்கும்போது தூயோனான அல்லாஹ் அவரைக் கைப்பற்றிவிடுவான்.

அந்த இடம் மறுமை நாளில், “எனது இறைவனே! இவர் தான், நீ என்னிடம் ஒப்படைத்தவர்” என்று கூறும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

(இப்னுமாஜா: 4263)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، وَعُمَرُ بْنُ شَبَّةَ بْنِ عَبِيدَةَ، قَالَا: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ قَالَ: أَخْبَرَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

إِذَا كَانَ أَجَلُ أَحَدِكُمْ بِأَرْضٍ أَوْثَبَتْهُ إِلَيْهَا الْحَاجَةُ، فَإِذَا بَلَغَ أَقْصَى أَثَرِهِ، قَبَضَهُ اللَّهُ سُبْحَانَهُ، فَتَقُولُ الْأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ: رَبِّ هَذَا مَا اسْتَوْدَعْتَنِي


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4263.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-4261.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31671-உமர் பின் அலீ அல்முகத்தமீ என்பவர் நல்லமனிதர் தான் என்றாலும் இவர் தத்லீஸ் செய்பவர் என்று அறிஞர்கள் விமர்சிக்கின்றனர் என அஃப்பான் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 134
    இறப்பு ஹிஜ்ரி 220
    வயது: 86
    கூறியுள்ளார்.
  • இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அவர்கள் இவர் பலமானவர்; அதிகம் தத்லீஸ் செய்பவர் என்று கூறியுள்ளார்.
  • இவர் தத்லீஸ் செய்பவர் என்பதைத் தவிர வேறு குறையில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    கூறியுள்ளார். இவ்வாறே அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இவர் நம்பகமானவர்; என்றாலும் இவர் தத்லீஸ் செய்பவர் என்ற குறைமட்டும் இல்லாவிட்டால் இவர் கூடுதலாக அறிவிக்கும் செய்திகளை நாம் ஏற்றிருப்போம் என்று அபூஹாதிம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அவர்கள் கூறியது போன்றே இவர் பலமானவர்; அதிகம் தத்லீஸ் செய்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/124, தஹ்தீபுல் கமால்-21/470, அல்இக்மால்-10/106, அல்காஷிஃப்-3/496, தஹ்தீபுத் தஹ்தீப்-3/245, தக்ரீபுத் தஹ்தீப்-1/725, தஃரீஃபு அஹ்லித் தக்தீஸ்-1/167)


இவர் தனது ஆசிரியர் இஸ்மாயீல் பின் அபூகாலித் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்துள்ளார் என்பதால் இதில் தத்லீஸ் இல்லை. என்றாலும் இந்தச் செய்தியை இஸ்மாயீல் பின் அபூகாலித் அவர்களிடமிருந்து அறிவிக்கும் உமர் பின் அலீ, முஹம்மத் பின் காலித் ஆகியோரும், ஹுஷைம் அவர்களின் வழியாக அறிவிக்கும் மூஸா பின் முஹம்மத் என்பவரும் நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

  • இஸ்மாயீல் பின் அபூகாலித் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் முக்கியமாக இப்னு உயைனா, யஹ்யா பின் ஸயீத் ஆகியோரும், ஹுஷைம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும் இந்தச் செய்தியை இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளவர்களே மிகப்பலமானவர்கள் என்பதால் அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் இப்னுமஸ்ஊத் (ரலி) வழியாக வரும் இந்த செய்தி நபித்தோழரின் கூற்று என்றே முடிவு செய்துள்ளனர்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-1073 , அல்இலலுல் வாரிதா-848, 5/238)


3 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தஃப்ஸீர் அப்துர்ரஸ்ஸாக்-835.

تفسير عبد الرزاق (2/ 60)
نا عَبْدُ الرَّزَّاقِ عَنِ ابْنِ عُيَيْنَةَ , عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ , عَنْ قَيْسٍ , قَالَ: قَالَ ابْنُ مَسْعُودٍ: ” إِذَا كَانَ أَجَلُ الرَّجُلِ بِأَرْضٍ أُنْبِتَ لَهُ إِلَيْهَا حَاجَةٌ , فَإِذَا بَلَغَ أَقْصَى أَمْرَهُ قُبِضَ , فَتَقُولُ الْأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ: هَذَا مَا اسْتَوْدَعْتَنِي 

தஃப்ஸீர் யஹ்யா பின் ஸலாம்-484.

تفسير يحيى بن سلام (2/ 683)

أَبُو سَهْلٍ، عَنِ ابْنِ دِينَارٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: إِذَا أَرَادَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَنْ يَقْبِضَ عَبْدًا بِأَرْضٍ جَعَلَ لَهُ بِهَا حَاجَةً، فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ قَالَتْ لَهُ الأَرْضُ: هَذَا مَا اسْتَوْدَعْتَنِي.

ஸுனன் ஸயீத்-894.

سنن سعيد بن منصور -ط أخرى (7/ 47)

894- حَدَّثَنَا سَعِيدٌ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ ، قَالَ : سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ ، يَقُولُ : إِذَا كَانَ أَجَلُ رَجُلٍ بِأَرْضٍ أُثْبِتَ لَهُ بِهَا حَاجَةٌ ، فَإِذَا بَلَغَ أَقْصَى أَجَلِهِ قَضَى أَجَلَهُ قُبِضَ ، فَتَقُولُ الأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ : يَا رَبِّ ، هَذَا مَا اسْتَوْدَعْتَنِي.

இப்னு மாஜா-4263 , முஸ்னத் பஸ்ஸார்-1889 , அல்முஃஜமுல் கபீர்-10403 ,

அல்இலலுல் வாரிதா-848.

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (5/ 238)

848- وَسُئِلَ عَنْ حَدِيثِ قَيْسٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عليه وسلم، قال: إِذَا كَانَ أَجَلُّ الرَّجُلِ بِأَرْضٍ أَتَتِ الْحَاجَةُ لَهُ فَيَعْمِدُ إِلَيْهَا، … الْحَدِيثَ.
فَقَالَ: يَرْوِيهِ إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، فَرَفَعَهُ عَنْهُ عَمْرُو بْنُ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، وَمُحَمَّدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ، وَهُشَيْمٌ مِنُ رِوَايَةِ مُوسَى بْنِ حَيَّانَ، عَنِ ابْنِ مَهْدِيٍّ عَنْهُ، وَغَيْرُهُ يَرْوِيهِ، عَنْ هُشَيْمٍ وَلَا يَرْفَعُهُ.
وَكَذَلِكَ رَوَاهُ ابْنُ عُيَيْنَةَ، وَيَحْيَى الْقَطَّانُ، وَغَيْرُهُمَا مَوْقُوفًا، وَهُوَ الصَّوَابُ.

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عبد الله الوكيل، حدثنا عمر بن شبة، حدثنا يحيى، حدثنا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: إِذَا كَانَ أَجَلُ أَحَدِكُمْ بِأَرْضٍ أَتَى لَهُ الْحَاجَةُ فَيَعْمِدُ إِلَيْهَا، فَإِذَا كَانَ أَقْصَى أَثَرَهُ قُبِضَ، فَتَقُولُ الْأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ: هَذَا مَا استودعتني.

ஹாகிம்-122 , 123 , 124 , 1358 , ஷுஅபுல் ஈமான்-9423 ,

இது இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் கூற்று என்றாலும் இந்தச் செய்தி சுயமாக ஆய்வு செய்து கூறும் செய்தியல்ல என்பதாலும்; இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்கள், மற்ற சமுதாய வேதமுடையவர்களிடமிருந்து அறிவிக்கமாட்டார் என்பதாலும்; இந்தக் கருத்து வேறு நபித்தோழர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதாலும் இந்தச் செய்தியை சில அறிஞர்கள் ஹுக்முல் மர்ஃபூஃஉடைய செய்தி அதாவது நபியின் சொல்லைப் போன்றது என்ற அடிப்படையில் இதைச் சரியானது என்று கூறியுள்ளனர்.


இந்தக் கருத்தின் முதல் பகுதி வேறு சரியான அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. பார்க்க: திர்மிதீ-2147 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.