தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2777

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறியதாவது:

அலீயே! பார்வை, பார்வையை பின்தொடர வேண்டாம். முதல் (பார்வை) உனக்குரியது (அனுமதிக்கப்பட்டது). அடுத்தது உனக்கு அனுமதிக்கப்பட்டதல்ல.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்-தனித்து அறிவிக்கப்பட்ட செய்தி” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும். இதை ஷரீக் என்பவரின் வழியாகவே நாம் அறிகிறோம்.

(திர்மிதி: 2777)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ أَبِي رَبِيعَةَ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، رَفَعَهُ قَالَ:

«يَا عَلِيُّ لَا تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الأُولَى وَلَيْسَتْ لَكَ الآخِرَةُ»

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ شَرِيكٍ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2701.
Tirmidhi-Shamila-2777.
Tirmidhi-Alamiah-2701.
Tirmidhi-JawamiulKalim-2720.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்-முஹம்மத் பின் ஈஸா

2 . அலீ பின் ஹுஜ்ர்

3 . ஷரீக் பின் அப்துல்லாஹ்-அல்காழீ

4 . உமர் பின் ரபீஆ-அபூரபீஆ

5 . அப்துல்லாஹ் பின் புரைதா

6 . புரைதா (ரலி)-ஆமிர் பின் ஹுஸைப்


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19163-ஷரீக் பின் அப்துல்லாஹ்-அல்காழீ அவர்களைப் பற்றி சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர். இதற்கு காரணம் இவர் கூஃபாவில் நீதிபதியாக ஆன பிறகு நினைவாற்றல் சரியில்லாததால் ஹதீஸ்களை அறிவிப்பதில் அதிகம் தவறிழைத்தார். எனவே இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் சரியானவை அல்ல. இவரைப் போன்று மற்றவர்கள் அறிவித்தால் ஏற்கலாம். முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் இவரின் சில செய்திகளை துணைச் சான்றாக கூறியுள்ளார்.

பார்க்க: ராவி-19163-ஷரீக் பின் அப்துல்லாஹ்-அல்காழீ.


  • மேலும் இதில் வரும் ராவீ-31421-உமர் பின் ரபீஆ-அபூரபீஆ அவர்களை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    பலமானவர் என்று கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்.


1 . இந்தக் கருத்தில் புரைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஷரீக் பின் அப்துல்லாஹ் —> உமர் பின் ரபீஆ —> அப்துல்லாஹ் பின் புரைதா —> புரைதா (ரலி)

பார்க்க: அஹ்மத்-22974, 22991, 23021, அபூதாவூத்-2149, திர்மிதீ-2777, ஹாகிம்-2788, …


  • இஸ்ராயீல் பின் யூனுஸ் —> உமர் பின் ரபீஆ —> அப்துல்லாஹ் பின் புரைதா —> புரைதா (ரலி)

பார்க்க: முஸ்னத் ரூயானீ-22,

مسند الروياني (1/ 69)
22 – نا ابْنُ إِسْحَاقَ، نا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ، وَيَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ قَالَا: نا شَرِيكٌ، عَنْ أَبِي رَبِيعَةَ (ح) ، وَنا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَعَمْرُو بْنُ عَلِيٍّ قَالَا: نا أَبُو أَحْمَدَ، نا إِسْرَائِيلُ، عَنْ أَبِي رَبِيعَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَلِيٍّ: «لَا تُتْبَعِ النَّظْرَةَ النَّظْرَةَ، فَإِنَّ لَكَ الْأُولَى، وَلَيْسَتْ لَكَ الْآخِرَةُ»


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-4363,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.