தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2950

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அல்குர்ஆனுக்கு (அதன் ஞானமின்றி) சுயவிளக்கம் அளிப்பவனுக்குரிய தண்டனை குறித்து வந்துள்ளவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

யார் குர்ஆனில் (அதன் வசனங்கள் குறித்த) ஞானமின்றி (அதற்கு) சுயவிளக்கமளிக்கிறாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(திர்மிதி: 2950)

بَابُ مَا جَاءَ فِي الَّذِي يُفَسِّرُ القُرْآنَ بِرَأْيِهِ

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ قَالَ فِي القُرْآنِ بِغَيْرِ عِلْمٍ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ»


Tirmidhi-Tamil-2874.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2950.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2893.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் அப்துல்அஃலா பின் ஆமிர் அஸ்ஸஅலபீ என்பவரிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் என்பவர் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    ஆவார். அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் ஸுஃப்யான் பின் வகீஃ பின் அல்ஜர்ராஹ் என்று கூறியிருப்பது தவறாகும். காரணம் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    தான் இவரிடமிருந்து அறிவித்துள்ளார். ஸுஃப்யான் பின் வகீஃ அல்ல.
  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அப்துல்அஃலா பின் ஆமிர் அஸ்ஸஅலபீ என்பவர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-2951 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.